வெள்ளி, 30 ஜூலை, 2021

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: புதிய அம்சம் அறிமுகம், நன்மைகள் ஏராளம்!!

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: புதிய அம்சம் அறிமுகம், நன்மைகள்  ஏராளம்!!

SBI YONO App: நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. SBI தனது வங்கி செயலியான யோனோ தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, SBI-யின் ஆன்லைன் வங்கி செயல்முறை முன்பை விட பாதுகாப்பானதாக மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் என்ன, அதைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

SBI ட்வீட் செய்தது

இந்த புதுப்பிப்பு தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில் இப்போது SBI உடனான ஆன்லைன் வங்கி செயல்முறை முன்பை விட அதிகம் பாதுகாப்பானதாகி விட்டது என்று எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய YONO Lite App செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். சிம் பைண்டிங் என்ற புதிய அம்சத்தைத் தொடங்கியுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

சிம் பைண்டிங் அம்சம் என்றால் என்ன

இது ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைலில் இருந்து ஒரே ஒரு சாதனத்தில் மட்டுமே லாக் இன் செய்ய முடியும். வேறு ஆப்ஷனல் எண்ணிலிருந்தும் லாக் இன் செய்ய முடியாது. அதாவது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் சிம் எந்த போனில் உள்ளதோ அந்த போனிலிருந்துதான் நாம் லாக் இன் செய்ய முடியும். வேறு எந்த தொலைபேசியிலிருந்தும் நாம் லாக் இன் செய்ய முடியாது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் (SBI Customers) வேறு எந்த எண்ணிலிருந்தும் லாக்-இன் செய்ய முயற்சித்தால், அவர்கள் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

YONO App-ஐ புதுப்பிக்க வேண்டும்

இந்த புதிய அம்சத்தின் மூலம், ஆன்லைன் வங்கியின் வசதி முன்பை விட பாதுகாப்பாகிவிட்டது. இதைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்கள் யோனோ செயலியைப் புதுப்பிக்க வேண்டும். வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவின் மூலம் புதிய விதி குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. இதில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ லைட் ஆப்பை (SBI Yono App) பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செயலியில் இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ யோனோ லைட் ஆப்பில் பதிவு செய்யும் செயல்முறை இதோ

- நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், பிளே ஸ்டோரிலிருந்து எஸ்பிஐ யோனோ லைட் ஆப் செயலியைப் பதிவிறக்கவும்.
- இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும் (SIM-1 SIM-2).
- ஒற்றை சிம் இருந்தால் எந்த சிம்மையும் தேர்ந்தெடுக்கலாம்.
- திரையில் ஒரு செய்தி தோன்றும். Proceed என்பதைக் கிளிக் செய்தவுடன், எஸ்எம்எஸ் வழியாக ஒரு குறியீடு அனுப்பப்படும்.
- பதிவுத் திரையில் உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு, REGISTER என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு நீங்கள் ஒரு ஆக்டிவேஷன் கோடைப் பெறுவீர்கள். இந்த ஆக்டிவேஷன் கோட் 30 நிமிடங்களுக்கு மட்டுமே செயல்படும்.
- செயலியில் இந்த குறியீட்டை உள்ளிட்ட பிறகு, ஆக்டிவேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும். இதன் பிறகு பயனர்கள் யோனோ லைட் செயலியைப் பயன்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்