Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 ஜூலை, 2021

குறைந்த வட்டியில் கடன் வாங்க வேண்டுமா.. இதனை கவனத்தில் கொள்ளுங்கள்..!

அவசர தேவைக்கு உதவும் கடன்

இன்றைய காலகட்டத்தில் அவசரத் தேவைக்கு பணம் தேவை எனில், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பர்சனல் லோன் எனப்படும், தனிநபர் கடன்கள் தான்.

இந்த தனிநபர் கடன்களுக்கு செக்யூரிட்டி தேவையில்லை. மற்ற கடன்களை காட்டிலும் இதற்கு வட்டி சற்று அதிகம் என்றாலும், பிணையமாக எதுவும் தேவையில்லை என்பதால், இதனை மக்கள் மிக அதிகமாக விரும்புகின்றனர்.

தங்கம், சொத்து, மியூச்சுவல் ஃபண்டு, பிக்ஸட் டெபாசிட், கார் உள்ளிட்ட பல முதலீடுகள் போன்றவற்றை பயன்படுத்தி கடன் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இவை இல்லாத பட்சத்தில் மக்கள் தனிநபர் கடன்களை பயன்படுத்தலாம் என்பது தான் இதன் சிறப்பம்சமே.

அவசர தேவைக்கு உதவும் கடன்

இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பற்ற கடனாக பார்க்கப்பட்டாலும், அவசர தேவைக்கு உதவுவது பர்சனல் லோன் தான். இது அவசர தேவைக்கு பொருட்கள் வாங்குதல், திருமண செலவுகள், வீட்டு புதுப்பித்தல், உள்ளிட்ட பல செலவுகளுக்கும் உதவுகிறது. இந்த தனி நபர் கடனை பெறுவதற்கு சிபில் ஸ்கோர்கள் முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது.

கிரெடிட் ஸ்கோரை நன்றாக வைத்திருங்கள்

உங்களது கிரெடிட் ஸ்கோர் என்பது உங்களது திரும்ப செலுத்தும் போக்கினை காட்டுகின்றது. ஆக நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது, உங்களுக்கு விரைவில் கடன் கிடைக்க வழிவகுக்கும். இதனை வைத்து தான் வங்கிகள் கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என தீர்மானிக்கின்றன. வட்டி விகிதத்தினையும் தீர்மானிக்கின்றன.

பாதுகாப்பான கடனை அணுகுங்கள்

பாதுகாப்பற்ற கடன்கள் எப்போதும் வட்டி விகிதம் அதிகம் என்பதால், முடிந்த மட்டில் வட்டி விகிதம் குறைவாக உள்ள பாதுகாப்பான கடனை நாடுங்கள். இதனால் உங்களுக்கு கணிசமான தொகையும் மிச்சமாகும். எளிதில் அணுகலாம்.

வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்

நிதி நிறுவனங்களுக்கு பதிலாக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை விட, இங்கு வட்டி விகிதம் குறைவு. இதனால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.

கடனுக்கான கால அவகாசம்

கடனுக்கான கால அவகாசத்தினை பொறுத்தும் வட்டி விகிதம் இருக்கும் என்பதால், அதனையும் கடன் வாங்கும் முன்பே கவனிக்கலாம். கடன் வழங்குனர்கள் உங்களது கடனுக்கான கால அவகாசத்தினை பொறுத்தும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யலாம். நீங்கள் நீண்டகாலத்திற்கு அவகாசம் எடுக்கிறீர்கள் எனில், வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும்.

ஒருவர் பல இடங்களில் விண்ணப்பத்தினை தவிருங்கள்

பல இடங்களில் கடனுக்கான விண்ணப்பம் செய்வதை தவிருங்கள். இதுவும் உங்களது கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது நீங்கள் குறைந்த வட்டியில் கடன் வாங்குவதில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். உங்களது சிபில் மதிப்பெண் தொடர்ந்து 700 மேலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல், விரைவில் பர்சனல் லோன் உங்களுக்கு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக