Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 ஜூலை, 2021

வங்கி திவால்.. இனி "நோ டென்ஷன்" 90 நாட்களில் பண பட்டுவாடா.. புதிய சட்டம்..!

  90 நாட்களில் தீர்வு

இந்தியாவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகியும், கடன் மோசடியிலும் சிக்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் வருகிறது. பல வங்கிகளுக்குத் தீர்வு காணும் வரையில் தத்தம் வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை மக்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த மோசமான நிலையை மாற்ற ஒன்றிய அரசு இன்று நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

90 நாட்களில் தீர்வு

இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அரசு, ஒரு வங்கி ரிசர்வ் வங்கியின் மோரோடோரியம் கட்டுப்பாட்டிற்குள் வரும் பட்சத்தில் வங்கியில் டெபாசிட் அல்லது கணக்கு வைத்துள்ள மக்களுக்கு DICGC அமைப்பு அளிக்கும் 5 லட்சம் ரூபாய் அளவிலான இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் 90 நாட்களுக்குள் பணத்தை அளிக்கப்பட வேண்டும் எனப் புதிய சட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ்

கடந்த வருடம் ஒன்றிய அரசு வங்கி டெபாசிட்களுக்கு அளிக்கப்படும் DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளவை 1 லட்சம் ரூபாய் அளவில் இருந்து 5 மடங்கு அதிகரித்து 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்குப் பாதுகாப்பு அளித்தது.

DICGC அமைப்பின் இன்சூரன்ஸ்

இதன் மாற்றத்தின் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகையின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பு உயர்த்தியதன் மூலம் வங்கியில் ஒருவர் 5 லட்சம் ரூபாய் வரையில் எவ்விதமான அச்சமும் இல்லாமல் வைப்புச் செய்யலாம். வங்கி திவால் ஆனாலும் DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை திருப்பிப் பெற முடியும்.

பிஎம்சி வங்கி

சமீபத்தில் தீர்வு காணப்பட்ட பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்ரேட்டிவ் வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு இன்னும் வைப்புத் தொகை கொடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையைச் சமாளிக்கவே இந்தப் புதிய சட்டத்தின் மூலம் 90 நாட்களுக்குள் டெபாசிட் தொகை DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் அளிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பிஎம்சி வங்கி, யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி

இப்புதிய சட்டம் மூலம் பிஎம்சி வங்கி, யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி போன்ற திவாலான மற்றும் மோரோடோரியம் கீழ் வைக்கப்படும் வங்கிகளின் வைப்பு நிதியாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

நிர்மலா சீதாராமன்

மேலும் இந்தச் சட்டம் பருவகால நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உடனடி தீர்வு காணும் இந்த இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக