Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 9 ஜூலை, 2021

டிஜிட்டல் கேந்திரா.. அமேசான்.காம் இந்தியாவில் துவங்கிய புதுச் சேவை..!

அமேசான் டிஜிட்டல் கேந்திரா

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் சேவை நிறுவனமான அமேசான் இந்தியாவில் தனது ஆன்லைன் வர்த்தகத்தை அனைத்து வழிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்குள் இழுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. இதற்காகப் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது அமேசான்.

 
1 கோடி MSME நிறுவனங்கள்

அமேசான் இந்தியா நிறுவனம் குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் டிஜிட்டல் கேந்திரா என்னும் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு மூலம் சுமார் 1 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை 2025ஆம் ஆண்டுக்குள் தனது டிஜிட்டல் வர்த்தகத் தளத்திற்குள் இணைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

அமேசான் டிஜிட்டல் கேந்திரா

அமேசான் டிஜிட்டல் கேந்திரா என்பது ஆன்லைன் சேவை தளம் இல்லை, MSME நிறுவனங்களுக்கான ஒரு ரிசோர்ஸ் அலுவலகம். இந்த அலுவலகத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஈகாமர்ஸ் வர்த்தகத்தின் நன்மைகளை எடுத்துரைக்கும் ஒரு தளமாக உள்ளது.

MSME நிறுவனங்களுக்கு உதவி

இது மட்டும் அல்லாமல் MSME நிறுவனங்களுக்குத் தேவையான ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ், கேடலாக் உதவிகள், டிஜிட்டல் மார்கெட்டிங் உதவிகள், ஜிஎஸ்டி மற்றும் வரி கணக்கீடு, செலுத்தல் உதவிகள் என ஒரு நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து டிஜிட்டல் சேவைகளையும் இந்த அமேசான் டிஜிட்டல் கேந்திரா மூலம் பெற முடியும்.

அமேசான்

அமேசான் டிஜிட்டல் கேந்திரா மூலம் அமேசான் தளத்திற்குள் இணையும் நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் டெலிவரி செய்ய முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது

 1 பில்லியன் டாலர் முதலீடு

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் MSME நிறுவனங்களின் வர்த்தகத்தை மேம்படுத்த அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெப் பெசோஸ் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு செய்யவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக