Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 29 ஜூலை, 2021

ஆன்லைனில் இனி யாரும் உங்களைக் கண்காணிக்க முடியாது.. ஆண்ட்ராய்டின் புதிய பாதுகாப்பு அம்சம் இது தான்..

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி இந்த தொல்லையே இல்லை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் ஆப் டிராக்கிங் வெளிப்படைத்தன்மை என்ற ஐபோன் பயனர்களுக்காக மிகவும் விரும்பப்பட்ட அம்சத்தைக் கொண்டு வந்தது, இது பயனர்கள் பயன்படுத்தும் பயன்பாடுகளை ஆன்லைனில் கண்காணிப்பதைத் தடுக்க அனுமதிக்கிறது. இப்போது, கூகிள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்ட்ராய்டு 12 உடன், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இதே போன்ற அம்சத்தைக் கொண்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி இந்த தொல்லையே இல்லை

சமீபத்தில் வெளியான கூகிள் ஆதரவு பக்கத்தின்படி, பயனர்கள் ஒரு விளம்பர ஐடியை நீக்குவதன் மூலம் இலக்கு அல்லது தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களிலிருந்து இனி விலக முடியும். இது விளம்பரதாரர்களை ஆன்லைனில் கண்காணிக்க அனுமதிக்காமல், அவர்கள் அடையாளம் காட்டும் அடையாள காட்டியாகவும் செயல்படுகிறது. IOS 14.5 உடன் ஆப்பிளின் ஆப் டிராக்கிங் வெளிப்படைத்தன்மை அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இது வெளி வருகிறது.

ஆப்பிள் ஐபோன்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு 12ல் களமிறங்கும் பாதுகாப்பு அம்சம்

இது அனைத்து வகையான பயனர்களிடமிருந்தும் நன்கு பாராட்டப்பட்ட ஒரு முக்கிய அம்சமாகும். ஏனெனில் இது ஐபோன் மற்றும் ஐபாட் பயனர்களுக்கு மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களை விளம்பர நோக்கங்களுக்காகக் கண்காணிக்க அனுமதிக்காத விருப்பத்தை வழங்குகிறது. இப்போது, அண்ட்ராய்டு பயனர்களும் இதே போன்ற பாதுகாப்பு அம்சத்தை வரவிருக்கும் அண்ட்ராய்டு 12 உடன் பெறப்போகின்றனர் என்பது மகிழ்ச்சிகரமான செய்தி.

தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களிலிருந்து இனி விலகலாம்

விளம்பர ஐடி என்பது கூகிள் பிளே சேவைகளால் வழங்கப்பட்ட விளம்பரத்திற்கான தனித்துவமான, பயனர் மீட்டமைக்கக்கூடிய ஐடி ஆகும். இது பயனர்களுக்குச் சிறந்த கட்டுப்பாடுகளை அளிக்கிறது மற்றும் டெவலப்பர்களுக்கு அவர்களின் பயன்பாடுகளைத் தொடர்ந்து பணமாக்குவதற்கு எளிய, நிலையான அமைப்பை இது வழங்குகிறது. கூகிள் பிளே பயன்பாடுகளுக்குள் பயனர்கள் தங்கள் அடையாள காட்டியை மீட்டமைக்க அல்லது தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களிலிருந்து விலகுவதற்கு இது உதவுகிறது.

கூகிளின் கண்காணிப்பு எதிர்ப்பு அம்சம்கூகிளின் கண்காணிப்பு எதிர்ப்பு அம்சம்

கூகிள் அதன் ஆதரவு பக்கத்தில் கூறியது, ''கூகிளின் கண்காணிப்பு எதிர்ப்பு அம்சம் ஆப்பிளின் பயன்பாட்டு கண்காணிப்புக்கு ஒத்த வழியில் செயல்படும் வெளிப்படைத்தன்மை அம்சமாகும். இது பயனர்களுக்கு அவர்களின் ஆண்ட்ராய்டு தொலைப்பேசிகளில் விளம்பர அடையாள காட்டியை நீக்கம் செய்யும் விருப்பத்தை வழங்குகிறது. விளம்பர ஐடி என்பது விளம்பரதாரர்களுக்கான அடையாளங்காட்டியாக செயல்படும் ஒரு தனித்துவமான கண்காணிப்பு எண்ணாகும்.

இனி விளம்பரதாரர்கள் பயனரின் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியாதா?

புதிய அண்ட்ராய்டு 12 உடன், பயனர்கள் தங்கள் விளம்பர ஐடியை நீக்கினால், விளம்பரதாரர்கள் எந்த தகவலையும் பயனரிடமிருந்து பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் ஆப் டிராக்கிங் வெளிப்படைத்தன்மை அம்சம் இதே கருத்தில் செயல்படுகிறது. விளம்பரதாரர்களுக்கான ஆப்பிளின் அடையாளங்காட்டி ஒரு ஐடிஎஃப்ஏ குறியீடு என அழைக்கப்படுகிறது. மேலும் இது பயன்பாடுகளுக்கு இடையில் பயனரின் செயல்பாட்டைக் கண்காணிக்கப் பயன்படுகிறது.

டெவலப்பர்கள் மறுபுறம் மறுப்பு

அமேசான் அல்லது பிளிப்கார்ட்டில் ஒரு தயாரிப்பைத் தேடுவது, பின்னர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் போன்ற பிற பயன்பாடுகளில் விளம்பரங்களில் அதே அல்லது ஒத்த தயாரிப்புகளைப் பார்ப்பது போன்றவை இதனால் தான் உங்களுக்கு நடக்கிறது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான இந்த அம்சம் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு புதிய அக்கறை காட்டுவதால் பயனர்களின் ஆதரவு நன்றாகக் கிடைக்கும். டெவலப்பர்கள் மறுபுறம் இதற்கு பெரும் மறுப்பை வெளிப்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக