பிரேசில்
நாட்டை சேர்ந்த 7 வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா என்பவர் 7 சிறுகோள்களை
கண்டுபிடித்து உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக இந்த சிறுமிக்கு இரண்டு வயது இருக்கும்போதே விண்வெளி மற்றும்
வானியல் மீதான விருப்பம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல் இப்போது உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் நாம் வளர்க்கும் செடிகொடிகள், புல்வெளிகளை கவனிப்பது, ஜன்னல்களை சுத்தம் செய்வது, மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என பலவிதமான வேலைகளுக்கு புதிய தொழில்நுட்ப சாதனங்கள் தேவைப்படுகின்றன. எனவே புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இளைஞர்கள் அதிக ஆர்வம்காட்டுகின்றனர்.
மேலும் 7 சிறுகோள்களை கண்டுபிடித்து உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிக்கோல் ஒலிவேராவின் தயார் கூறியது என்னவென்றால், நிக்கோல் இரண்டு வயதாக இருக்கும்போது நட்சத்திரத்தை வாங்கித் தருமாறு கேட்டார். அப்போது தான் அவரது அறிவியல் ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது.
உடனே அப்போதே மகளுக்கு பொம்மை நட்சத்திரம் ஒன்றை வாங்கி தந்த ஒலிவேராவின் தயார், உண்மையிலே குழுந்தைக்கு என்ன தேவை என்பதை கண்டுபிடித்தார். அதன்பின்பு ஒலிவேராவின் அறிவியல் வேட்கைக்கு தீனி கிடைக்கத் துவங்கியது.
குறிப்பாக சர்வதேச வானியல் தேடல் ( International Astronomical Search Collaboration ) மற்றும்நாசா அமைப்பு இணைந்து நடத்தும் 'Asteroid Hunt' என்ற அறிவியல் திட்டத்தில் நிக்கோல் ஒலிவேரா பங்கேற்று 7சிறுகோள்களை கண்டுப்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அண்மையில் பிரேசிலின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வானியல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் பேசுமாறு ஒலிவேரா கேட்டுக்கொள்ளப்பட்டார். அதேபோல் இந்த சிறுமி ஏற்கனவே பல பள்ளிகளில் விரிவுரைகளை வழங்கப் பழகிவிட்டார்என்று கூறப்படுகிறது.
மேலும் அனுபவம் வாய்ந்த அறிவயலாளர்களுடன் பேசி, பல விஷயங்களை கற்று கொள்ளும் வாய்ப்பும் இந்த குட்டி வானியாலாளருக்கு கிடைத்திருக்கிறது. இதுதவிர தனக்கென ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் வானியல் பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார் இந்த குட்டி வானியலாளர் நிக்கோல் ஒலிவேரா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக