Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 31 ஜூலை, 2021

வெள்ளப்பெருக்கிற்கு நடுவில் ஆன்லைன் கேமிங் விளையாடிய சிறுவர்கள்.. வைரலாகும் வீடியோ..

 இது ஆன்லைன் கேமிங் மீதான ஆர்வமா அல்லது அடிமைத்தனமா?

கேமிங் விளையாட்டிற்குக் குழந்தைகள் அடிமையாகிறார்கள் என்று பல செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். ஆனால், இப்படி ஒரு கேமிங் வெறியர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு வீடியோ மக்களிடையே பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இது ஆன்லைன் கேமிங் மீதான ஆர்வமா அல்லது அடிமைத்தனமா?

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு கேமிங் கஃபேவில் ஆன்லைன் கேமிங் பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில், இடுப்பு அளவு தண்ணீருக்குள் அமர்ந்து தொடர்ந்து ஆன்லைன் கேமை விளையாடியுள்ளனர். நம் ஊரில் இருக்கும் வீடியோ கேம் கடைகள் போல இந்த கேமிங் கஃபே பிலிப்பைன்ஸில் செயல்பட்டு வருகிறது. நாடே புயல் மற்றும் வெள்ளத்தால் மூழ்கி கிடைக்கும் நேரத்தில், இந்த சிறுவர்களின் செயல்பாடு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

சிலருக்கு இந்த வீடியோவை பார்த்ததும் வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் இதில் உள்ள ஆபத்து பற்றி தெரிந்தவர்களுக்கு, இந்த வீடியோ நெஞ்சை பதறவைக்கும். காரணம், சிறுவர்கள் அமர்ந்து இருக்கும் இடம் முழுமையாக நீரால் சூழப்பட்டுள்ளது. இவர்கள் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் கேமிங் கன்சோல்கள் எல்லாம் மின்சாரத்தில் இயங்குகிறது. சிறிதளவு மின்சாரம் கசிந்தாலும் அங்கு உள்ள அனைவருக்கும் இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

வேறு வலி இல்லாமல் கஃபேவில் இருந்து வெளியேறிய சிறுவர்கள்

வேறு வலி இல்லாமல் கஃபேவில் இருந்து வெளியேறிய சிறுவர்கள்

கேமிங் கஃபேவின் உரிமையாளர்கள் சிறுவர்கள் கடையை விட்டு வெளியேறும் படி வலியுறுத்தியும், சிறுவர்கள் அதை பொறுப்பெடுத்தால் கேட்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. பிறகு, பொறுமை இழந்த கேமிங் கஃபே உரிமையாளர் தனது ஸ்மார்ட்போனில் அவர்களை வெளியேறும் படி கூறி வீடியோ பதிவு செய்திருக்கிறார். இதற்குப் பின்னர் தான் சிறுவர்கள் ஒரு வழியாக வேறு வலி இல்லாமல் கஃபேவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை

எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை

சரியான நேரத்தில் சிறுவர்கள் வெளியேறியதால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன தான் கேமிங் ஆர்வம் இருந்தாலும், இப்படி வெள்ளப்பெருக்கிற்கு நடுவில் இடுப்பு அளவு நீரில் அமர்ந்து விளையாடுவது என்பது கொஞ்சம் ஓவர் தான். வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருது என்ன என்பதைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக