Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

டெஸ்லாவின் அடுத்த திட்டம் தான் என்ன.. 3 நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை.. எதற்காக..!

வரி குறைப்பு இருக்குமா?

அமெரிக்காவின் முன்னணி வாகன நிறுவனமாம்ன டெஸ்லா இன்க் இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பாகவே, இந்தியாவின் மூன்று வாகன உதிரி பாகங்கள் சப்ளையர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், டெஸ்லா ,உதிரி பாகங்கள் சப்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது முக்கிய மின்னணு உதிரி பாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் என பலவற்றிற்கும் நாடுவதாக தெரிகிறது. குறிப்பாக பேனல்கள், கண்ணாடிகள், பிரேக்குகள், கியர்கள் மற்றும் பவர் சீட்ஸ் உள்ளிட்ட பல உதிரி பாகங்களுக்கும் சப்ளை செய்ய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிகின்றது.

டெஸ்லாவுக்கு சப்ளையர்ஸ்

ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்திற்கும் சோனா காம்ஸ்டார் லிமிடெட், சந்தர் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதிரி பாகங்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த நிலையில் சந்தையில் நுழையும் முன்பே அதற்காக டெஸ்லா நிறுவனம் ஆயத்தமாகி வருகின்றது.

வரி குறைப்பு இருக்குமா?

கடந்த ஜூலை மாதம் எலான் மஸ்க், டெஸ்லா தனது கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்தால், அதன் பிறகு உற்பத்தியினை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் வரி குறைப்புக்காக அரசினை நாடியுள்ளது. இதற்கு தற்போது வரையில் அரசு தரப்பில் இருந்து எந்த சாதகமான பதிலும் வந்ததாக தெரியவில்லை.

வரியை குறைக்க வேண்டும்

சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் இவ்வாறு வரியை குறைப்பதன் மூலம், இதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகன வணிகம் அதிகரிக்கும். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என டெஸ்லா தரப்பில் கூறப்பட்டது.

டெஸ்லாவின் அடுத்த திட்டம்

நடப்பு ஆண்டில் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கவுள்ளதாக கூறியிருந்த எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன கார்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அரசு வரியை குறைக்குமா? டெஸ்லா இங்கு உற்பத்தியினை தொடங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அரசு தரப்பில் வரியை குறைக்க முடியாது என்று கூறியிருந்த நிலையில், டெஸ்லாவின் அடுத்த திட்டம் தான் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிலும் எதற்காக சப்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது என பல கேள்விகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக