Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஏடிஎம் கார்ட் அளவில் 4ஜி ஸ்மார்ட்போன்- உயர்தர அம்சங்களோடு ரூ.7,500 மட்டுமே: எப்படி வாங்குவது?

 4ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

மோனி நிறுவனத்தின் மோனி மின்ட் சாதனம் உலகின் மிகச்சிறிய 4ஜி ஸ்மார்ட்போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இரட்டை சிம் கார்டு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.

4ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

சீன ஓஇஎம், மோனி தனது மோனி மின்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் மிகச்சிறிய 4ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 3 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இது பாம் போனைவிட சற்றே சிறியதாக இருக்கிறது. காரணம் பாம் போன், 3.3 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் பரிமாணங்கள் 89.5*45.5*11.5 மிமீ அளவாக இருக்கிறது.

மோனி மின்ட் ஸ்மார்ட்போனின் விலை

மோனி மின்ட் ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இதன் விலை $150 (தோராயமாக இந்திய மதிப்புப்படி ரூ.11,131) ஆக இருக்கிறது. இண்டிகோகோவின் க்ரவுட் ஃபண்டிங் தளத்தின் தகவல்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆரம்ப சலுகையாக $100 ஆக இருக்கும். இதன் இந்திய மதிப்புப்படி ரூ.7,421 ஆகும். அதேபோல் ஏர்லி பேர்ட் $115 எனவும் இண்டிகோகோ ஸ்பெஷல் ஸ்லாட்டில் $130 எனவும் காட்டப்படுகிறது. சாதனம் நவம்பரில் ஷிப்பிங் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மோனி மின்ட் விவரக்குறிப்புகள்

மோனி மின்ட் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம், மோனி புதினா உலகின் மிகச்சிறிய 4ஜி ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. இது இரட்டை சிம் ஆதரவை கொண்டுள்ளது. 854×450 தீர்மானத்தோடு கூடிய 3 இன்ச் டிஸ்ப்ளேவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பெயரிடப்படாத 1.5GHz குவாட் கோர் சிபியூ மூலம் இயக்கப்படுகிறது. இது 3ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. மெமரி விரிவாக்க ஆதரவாக 128ஜிபி வரை மெமரி கார்டு பொருத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 9 ஆதரவு

இது கூகுளின் தனிப்பயனாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு 9 ஆதரவு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 1250 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்புறத்தில் செல்பி வசதிக்கென 2 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இநத் ஸ்மார்ட்போனில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பேண்ட்ஸ் ஆதரவுகளும் இருக்கிறது.

உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட்போன்

இண்டிகோகோ மைக்ரோ தளத்தின் மூலம் இந்த சாதனத்தின் முன்கூட்டிய ஆர்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் ஷிப்பிங் நவம்பர் மாதம் முதல் தொடங்கும். இந்த சாதனமானது உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட்போனாகும். இது மிகச்சிறந்த நிலையில் இருக்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள பிற பொருட்களும் மைக்ரோ வடிவிலேயே இருக்கிறது.

3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு

இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இது 4ஜி ஆண்ட்ராய்டு 9.0 இயக்கமுறைமையோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 இன்ச் எல்சிடி ஸ்க்ரீன் வசதியோடு வருகிறது. இதில் ஜிபிஎஸ், கூகுள் ப்ளே, இரட்டை சிம், ப்ளூடூத் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது.

1250 எம்ஏஎச் ஆதரவு பேட்டரி

இதில் பொருத்தப்பட்டுள்ள 1250 எம்ஏஎச் ஆதரவு என்பது இதை ஒரு முறை சார்ஜ் செய்யும்போது 72 மணிநேர நீடித்த ஆயுளையும் வழங்குகிறது. அதேபோல் இதன் பயன்பாட்டு நேரம் என்பது நாம் உபயோகிக்கும் செயலிகள் மற்றும் அழைப்பு நேரங்களை பொறுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக