Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 ஆகஸ்ட், 2021

வாங்கிய 5 நாளில் வெடித்து சிதறிய OnePlus Nord 2 போன்.. ஒன்பிளஸ் நிறுவனம் என்ன சொன்னது தெரியுமா?

 வாங்கிய 5 நாளில் வெடித்து சிதறிய OnePlus Nord 2 போன்

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியச் சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலின் விற்பனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. இந்நிலையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கிய ஐந்து நாட்களில் திடீரென தீப்பிடித்த வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவம் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒன்பிளஸ் பயனர்களிடையே பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

வாங்கிய 5 நாளில் வெடித்து சிதறிய OnePlus Nord 2 போன்

உண்மையில் இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன? இந்தியாவில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதா? இதற்கு ஒன்பிளஸ் நிறுவனம் என்ன பதில் அளித்துள்ளது என்பது போன்ற முக்கியமான தகவலை இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். சரி, விஷயத்திற்கு வருவோம், இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் சாதனத்தைப் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்மணி கடந்த வாரம் வாங்கி பயன்படுத்தியுள்ளார்.

சைக்கிள் ஓட்டும்போது தீப்பிடித்து கருகிய ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் வாங்கி வெறும் 5 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், இந்த சாதனம் அவர் சைக்கிள் ஓட்டும்போது அவரின் ஸ்லிங் பேக்கிற்குள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் ஆசையை வாங்கிய புதிய நோர்ட் 2 சில நிமிடங்களில் எரிந்து கருகியது. பாதிக்கப்பட்டவர் விபத்தில் சிக்கியதாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\

பாதிக்கப்பட்டவர் ஒன்பிளஸ் நிறுவனத்தையும் டேக் செய்து கொடுத்த புகார்

பாதிக்கப்பட்ட பெண்மணி சேதமடைந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் படங்கள் பதிவு செய்து, ஒன்பிளஸ் நிறுவனத்தையும் டேக் செய்து இணையத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த அன்கூர் சர்மா பயனர் சேதமடைந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 பிரிவின் படங்களையும் வெளியிட்டார். பின்புற பேனல் முற்றிலும் அழிக்கப்பட்டதைப் படங்கள் காட்டுகிறது.

சைட் பேனல் மற்றும் டிஸ்பிளே எரிந்தது

சைட் பேனல் மற்றும் டிஸ்பிளே எரிந்தது

ஃப்ரேம், சைட் பேனல் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவையும் எரிக்கப்பட்டுள்ளதை அவரின் புகைப்படம் தெளிவாகக் காண்பிக்கிறது. பயனர் பதிவிட்ட பதிவில் ஒன்பிளஸ் நிறுவனம் உடனடியாக பதில் அளித்துள்ளது. அதில், வெடிப்புக்கான காரணத்தை நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஒன்பிளஸ் கூறியுள்ளது. தற்போது, ​​இந்த வெடிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஒன்பிளஸ் நிறுவனம் விபத்து பற்றி கூறிய பதில் இது தான்

அந்த ட்வீட்டில் ஒன்பிளஸ் கூறியது, "உங்கள் அனுபவத்தைப் பற்றி கேட்டு நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். நாங்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளோம், அதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். பாதிப்படைந்த நபர் டைரக்ட் மெசேஜ் மூலம் எங்களுடன் இணைக்கும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம், இதனால் உங்களுக்குத் தேவையான விஷயங்களை நாம் கலந்துரையாடி, நிலைமையை மாற்ற முடியும்." என்று ஒன்பிளஸ் நிறுவனம் பொறுப்பாகப் பதிலளித்துள்ளது.

OnePlus நோர்ட் 2 விற்பனை மற்றும் விலை என்ன?

OnePlus நோர்ட் 2 விற்பனை கடந்த ஜூலை 9 ஆம் தேதி இந்தியாவில் துவக்கியது. அதில் இந்த ஸ்மார்ட்போனின் 6GB + 128GB வேரியண்ட் மாடல் ரூ. 27,999 விலையிலும், இதன் 8GB + 128GB மாடல் ரூ 29,999 விலையிலும் மற்றும் இதன் 12GB + 256GB மாடல் ரூ 34,999 விலையிலும் விற்பனைக்குக் கிடைத்தது. இது கிரே சியரா, ப்ளூ ஹேஸ் மற்றும் க்ரீன் வூட்ஸ் எனப்படும் இந்தியப் பிரத்தியேக வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக