Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்.. கொஞ்சம் நல்லா யோசிங்க.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

----------------------------------------------------
ஃகாலி பிளவரா?? காலி பிளவரா??
----------------------------------------------------
நான் வாங்கி வந்த ஃகாலி பிளவரில் பூச்சி இருக்குன்னா, எடுத்துப் போட்டு நறுக்க வேண்டியதுதானே? அதைத்தாங்க நானும் செஞ்சேன். மீதி ஒண்ணுமே தேறலே. உண்மையில் இது தாங்க 'காலி" பிளவர் !
----------------------------------------------------
முதலாளியின் ஒரு ரூபாய் இனாம் !!
----------------------------------------------------
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாக கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார். உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...? உண்மைதான் அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன் என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
----------------------------------------------------
அம்மாஞ்சி கதை !!
----------------------------------------------------
அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவுசெய்தான். ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான். அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் ஏன் 2 டிக்கெட்கள் எடுக்கறீங்க..? என்றார். ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒண்ண வச்சுக்கலாம்ல.. ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா..? அதுக்குதான் பணம் வச்சிருக்கேன்.. பணத்தை யாரும் எடுத்துட்டாங்கன்னா..? பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்.. அதிலேர்ந்து எடுத்துப்பேன்.. அதையும் யாராவது பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா..? நான் என்ன முட்டாளா..? அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன் என்று பெருமையாக சொன்னான்
.----------------------------------------------------
கொஞ்சம் நல்லா யோசிங்க !!
----------------------------------------------------
புதிதாக கட்டப்பட்ட அந்த சிறைச்சாலையில் நிறையக் கைதிகளை அடைத்தனர். பிறகுதான் தெரிந்தது, அங்கிருக்கும் ஒரு மதில் சுவர் அவ்வளவு சிறியது என்று! யோசித்த சிறை அதிகாரிகள், அந்த சுவருக்கு அருகில் 'இங்கு 22,000 வோல்டேஜ் மின்சாரம் செல்கிறது. யாரும் தொட வேண்டாம்" என்று போர்டு மாட்டி, சில கம்பிகளையும் நட்டுவைத்தனர். அந்த சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட ஒரு கைதி அன்றிரவே அந்த மதில் சுவரைத் தாண்டிக் குதித்துச் சென்றான். எப்படி?

விடை : அவன் எழுதப் படிக்கத் தெரியாதவன். அதனால் அந்த போர்டு வாசகங்களைப்பற்றிக் கவலைப்படாமல் தாண்டிக் குதித்துச் சென்றான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக