Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல் மலை, ஈரோடு மாவட்டம்.

Velayudhaswami Temple : Velayudhaswami Velayudhaswami Temple Details |  Velayudhaswami- Erode | Tamilnadu Temple | வேலாயுத சுவாமி
அமைவிடம் :

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. இந்த திண்டல் மலை முழுவதும் உயர்ந்த மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

மாவட்டம் :

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல் மலை, ஈரோடு மாவட்டம்.

எப்படி செல்வது?

ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து திண்டல் மலைக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

கோயில் சிறப்பு :

இங்குள்ள முருகர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

திண்டல் மலையில் தீபஸ்தம்பத்தை கோயிலின் வெளியே நிறுத்திக் கட்டிய அமைப்பு மிகவும் சிறப்பு. 

முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும், ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் பக்தர்களை வரவேற்கின்றனர்.

கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இதில் சமய பெரியோர்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது. 

இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச்சுனையில் வற்றா நீரூற்று ஆண்டவனின் அபிஷேகத்திற்கும், பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.

திருவிழா :

மாதந்தோறும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடி வெள்ளிகள், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.

பிரார்த்தனை :

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் இரண்டு எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய எண்ணங்களை எண்ணியபடியே வேலாயுதசாமி நிறைவேற்றுகிறார். புதிய வாகனங்கள் வாங்குவோர் திண்டல் மலைக்கு சென்று வேலாயுதசாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்கின்றனர். 

நேர்த்திக்கடன் : 

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக