Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

தடுப்பூசி போட்டால் மனிதர்கள் குரங்காக மாறுவார்கள்- பரவிய தகவல்: பேஸ்புக் அதிரடி நடவடிக்கை!

பரவும் போலி தகவல்

ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய கொரோனா தடுப்பூசிகளை மனிதர்கள் செலுத்திக் கொண்டால், அவர்கள் சிம்பன்ஸிகளாக மாறுவார்கள் என தொடர்ந்து வதந்திகள் பரவியுள்ளது. இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட கணக்குகளை நீக்கியுள்ளது. இவை அனைத்தும் ரஷ்யன் மிஸ்இன்பர்மேஷன் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டவை எனவும் பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவும் போலி தகவல்

ரஷ்யன் மிஸ்இன்பர்மேஷன் நெட்வொர்க் ஆனது ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. இது இந்தியா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய மக்களை குறிவைத்து தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நெட்வொர்க் ஆனது கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அஸ்ட்ராஜெனேகோ என்ற கொரோனா தடுப்பூசி மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் எனவும் இது செயலற்றதாகிவிட்டது எனவும் குறிப்பிட்டு பல தகவல்கள் வெளியிட்டது. இந்த தகவல்களானது மீம்ஸ்களாகவும் கருத்துகளாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

தவறான தகவல்களை பரப்பும் கணக்குகள்

இடைபட்ட காலங்களுக்கு பிறகு மீண்டும் இந்த நெட்வொர்க் மே 2021 முதல் தவறான தகவல்களை பரப்பத் தொடங்கியுள்ளது. தற்போது ஃபைசர் தடுப்பூசி குறித்து தகவல்கள் பரப்பப்பட தொடங்கியுள்ளன. இந்த வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக சுமார் 65 பேஸ்புக் கணக்குகள் மற்றும் 243 இன்ஸ்டாகிராம் கணக்குகளை அகற்றப்பட்டு விட்டதாக குளோபல் ஐஓ அச்சுறுத்தல் நுண்ணறிவு முன்னணி மற்றும் பேஸ்புக் ஐஓ அச்சுறுத்தல் புலனாய்வு தலைவர் பென் நிம்மோ அறிக்கையில் குறிப்பிட்டார்.

இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக்

இந்த பதிவுகளானது இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக் ஆகியவற்றில் பார்வையாளர்களின் செல்வாக்கை பயன்படுத்தி இடுகைகளை வெளிப்படுத்தாமல் குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துவதே நோக்கமாக கொண்டுள்ளது. ரஷ்ய தவறான தகவல் நெட்வொர்க்குடன் தொடர்புடைய 300-க்கும் மேற்பட்ட கணக்குகளை பேஸ்புக் தடை செய்துள்ளது.

இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து வதந்தி

இந்த கணக்குகள் அனைத்தும் ரஷ்யாவின் தவறான தகவல் நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடுகைகள் அனைத்தும் இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள பயனர்களை குறிவைக்கிறது. பேஸ்புக் நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட தவறான கணக்குகளை தடை செய்துள்ளது.

65 பேஸ்புக் கணக்குகள், 243 இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தகவலின்படி, வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிரான தங்கள் கொள்கையை மீறியதற்காக 65 பேஸ்புக் கணக்குகள், 243 இன்ஸ்டாகிராம் கணக்குகள் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெளிநாட்டு நிறுவனத்தின் சார்பாக முறையற்ற நடத்தையை ஒருங்கிணைத்தது. இந்த பிரச்சாரத்திற்கும் Fazze க்கும் இடையே தொடர்பு உள்ளது. ஃபேஸ் தற்போது தங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது என நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட வதந்தி

#AstraZenecakills மற்றும் #AstraZenecalies, #stopAstraZeneca போன்ற ஹேஷ்டேக்குகளை மையமாக வைத்து பதிவிடப்பட்டது. மேலும் AstraZeneca சோதனை பக்க விளைவுகளை காட்டுகிறது எனவும் சிம்பன்சி மரபணுக்களை அடிப்படையாக வைத்து தடுப்பூசி உருவாக்கப்பட்டது எனவும் இந்த தடுப்பூசி தடை செய்யப்பட வேண்டும் இல்லையெனில் நாம் அனைவரும் சிம்பன்ஸியாக மாறுவோம் என பரப்பப்பட்டது.

அதிரடி நடவடிக்கை எடுத்த பேஸ்புக்

இந்த பிரச்சாரம் ஆனது Reddit, Medium, Change.org மற்றும் Medapply.co.uk உள்ளிட்ட பல தளங்களில் தவறான கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை உருவாக்கியதாக பேஸ்புக் குறிப்பிட்டது. தங்கள் குழுக்கள் உலகெங்கிலும் ஏமாற்றும் பிரச்சாரங்கள் பரப்புபவர்களை கண்டறிந்து அகற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக