
இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம்
காரணம் அந்த ஃப்ரிட்ஜ்-க்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 1,30,000 டாலர் இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம் வரை இருந்திருக்கிறது. இருப்பினும் கேட்பாரின்றி கிடைக்கும் பணத்தை ஒருசிலரே செய்யும் செயலை இவரும் செய்துள்ளார். அது பணத்தை கண்ட அந்த நபர் அது நம்முடையது இல்லை என்பதால் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இவர் ஆன்லைனில் செகண்ட் ஹேண்டில் வாங்கிய கிம்ச்சி குளிர்சாதன பெட்டியில் எப்படி அவ்வளவு பணம் வந்தது என்பதை நினைத்து வாயடைத்து போகிவிட்டார்.
பணம் குறித்து போலீஸில் தகவல்
இந்த பணம் குறித்து அவர் போலீஸில் தகவல் கொடுத்துள்ளார். குளிர்சாதனப் பெட்டியின் ஆன்லைன் விற்பனையாளரை அடையாளம் காண விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தென் கொரிய லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் சட்டத்தின்படி அவர் பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு சன்மானமாக வழங்கப்படும். அதேபோல் கண்டெடுத்த நபரை விசாரித்த பிறகு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிப்பார்கள்.
கண்டெடுக்கப்பட்டவரிடமே ஒப்படைக்கப்படும்
பணத்தின் உரிமையாளர் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அந்த பணம் கண்டெடுக்கப்பட்டவரிடமே ஒப்படைக்கப்படும். உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் கண்டெடுத்தவருக்கு குறிப்பிட்ட தொகை சன்மானமாக வழங்கப்படும். பணத்திற்கு கிரிமினல் வழக்குகளுடன் தொடர்பு இருந்தால் அது இரண்டு தரப்பினருக்கும் வழங்கப்படமாட்டாது.
குளிர்சாதன பெட்டியில் பணம் சேமிப்பு
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கொரியா டைம்ஸில் வெளியான அறிக்கைப்படி, குறைந்த வங்கி வட்டி விகிதங்கள் காரணமாக கிம்ச்சி வகை குளிர்சாதன பெட்டியில் பணத்தை சேமித்து வைக்கும் பழக்கம் நாட்டு மக்களிடையே அதிகரித்து இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ரத்தினபுரி எனும் பகுதி
அதேபோல் சமீப தினங்களுக்கு முன்பு இலங்கையில் ரத்தினபுரி எனும் பகுதி அமைந்துள்ளது. ரத்தினபுரி என்று பெயருக்கு மட்டும் வைக்கவில்லை காரணத்தோடுதான் வைத்திருக்கிறார்கள். இந்த பகுதியில் ரத்தினங்கள் அதிகமாகவே இருக்கும் காரணத்தால் இந்த பகுதிக்கு ரத்தினபுரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் கமாகே. இவர் ரத்தின வியாபாரி ஆவார். இந்த நிலையில் தனது வீட்டின் பின்பகுதியில் கிணறு தோண்ட முடிவெடுத்துள்ளார்.
கிணறு தோண்டும் போது கிடைத்த கல்
இதையடுத்து பணியாளர்களை வீட்டுக்கு அழைத்து கிணறு தோண்ட தொடங்கியுள்ளார். கிணறு தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கல் ஒன்று தட்டுப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வழக்கம் கிடைக்கும் சாதாரண கல் என்றே நினைத்து அதை ஒதுக்கி வைத்துள்ளார். பின் இந்த கல்லின் தோற்றம் நிறம் பார்த்த உடன் அவருக்கு ஏதோ சந்தேகம் தோன்றியுள்ளது.
நட்சத்திர நீலக்கல்
இந்த கல் ஆய்வு செய்யப்பட்டதில் இது நட்சத்திர நீலக்கல் என்பது தெரிய வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் என்பது இது தெரியவந்துள்ளது. இது இலங்கையின் கொல்லைப்புறத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட நட்சத்திர நீலக்கல் எடை சுமார் 510 கிலோ ஆகும். இது 2.5 மில்லியன் கேரட் எடையுள்ள சபையர் கொத்து என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது இந்த நட்சத்திர நீலக்கல்லின் இந்திய மதிப்பு ரூ.745 கோடி ஆகும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக