
இந்தியச் சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சவுதி ஆராம்கோ, இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எண்ணெய் நிறுவனம் மத்தியிலான பங்கு விற்பனை திட்டம் விரைவில் முடிவு பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி ஆரம்கோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான வர்த்தகத்தை விரைவில் முடிக்க ரிலையன்ஸ் நிர்வாகக் குழுவில் ஆராம்கோ உயர் அதிகாரி Yasir Al-Rumayyan நியமிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்குப் பின்பு இரு தரப்புக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.
20 சதவீத பங்குகள் விற்பனை
இந்த நிலையில் தற்போது சவுதி ஆரம்கோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எண்ணெய் வர்த்தகப் பிரிவில் 20 சதவீத பங்குகளை வாங்கும் திட்டத்தின் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி
சவுதி ஆரம்கோ உடனான வர்த்தகத்திற்காகவே முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தை ரிலையன்ஸ் O2C எனத் தனியாகப் பிரிந்தது.
ரிலையன்ஸ் O2C நிறுவனம்
தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் O2C நிறுவனத்தில் சவுதி ஆராம்கோ சுமார் 20 சதவீத பங்குகளை 20 முதல் 25 பில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் O2C அதிகாரிகள்
இன்று இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்த, பெயர் வெளியிட விரும்பாத சில ரிலையன்ஸ் O2C அதிகாரிகள் கூறுகையில், அடுத்த சில வாரத்தில் சவுதி ஆராம்கோ மற்றும் முகேஷ் அம்பானி மத்தியிலான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
இந்தத் தகவல் வெளியான பின்பு மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 2,202 ரூபாய் வரையில் உயர்ந்தது. ரிலையன்ஸ் பங்குகள் 2020 செப்டம்பர் 19ஆம் தேதி ஒரு பங்கு விலை 2,368.80 ரூபாய் வரையில் உயர்ந்தது.
குறைந்த விலையில் கச்சா எண்ணெய்
சவுதி ஆரம்கோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு அலைக்கு மிகவும் குறைந்த விலையில் ஆராம்கோ கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும். இதன் மூலம் ரிலையன்ஸ் இந்தியா முழுவதும் தனது பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிக்க முடியும்.
ரிலையன்ஸ் திட்டம்
இந்திய எரிபொருள் சந்தை தற்போது அரசு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் சவுதி ஆரம்கோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தத்திற்குப் பின்பு ரிலையன்ஸ் பார்த் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனங்களை விடவும் குறைவான விலைக்குப் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக