
இந்திய ரீடைல் சந்தையில் நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது.
ஈகாமர்ஸ் நிறுவனங்களின் முதலீடு மற்றும் வர்த்தக முறை குறித்து மத்திய அரசுக்கு பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சனையை மொத்தமாகத் தீர்க்கும் வகையில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈகாமர்ஸ் நிறுவனங்களை ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் என்ற புதிய கட்டமைப்புக்குள் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே ஈகாமர்ஸ் நிறுவனங்கள் நம்பிக்கையற்ற தீர்மானம், தள்ளுபடி விற்பனைக்குத் தடை எனப் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் இந்த ONDC திட்டத்தின் மூலம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அப்படி இந்தத் திட்டத்தில் என்ன பிரச்சனை..?!
$800 பில்லியன் ரீடைல் சந்தை
இந்தியாவின் 800 பில்லியன் டாலர் மதிப்பிலான ரீடைல் விற்பனை சந்தையை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டமிட்டு வரும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவும், மோனோபோலி பணிகளை வேரோடு பிடுங்கி எடுக்க மத்திய வர்த்தக அமைச்சகம் கொண்டு வந்த திட்டம் தான் ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் கட்டமைப்பு.
ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல்
ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் கட்டமைப்பு என்பது அனைத்து விதமான வர்த்தகம், சேவை, பணப் பரிமாற்றம் ஆகியவற்றை ஒரே டிஜிட்டல் அல்லது எலக்ட்ரானிக் நெட்வொர்க் கீழ் கொண்டு வரும் ஒரு திட்டம். இந்த நெட்வொர்க் ஓபன் சோர்ஸ் மெத்தட் மற்றும் ஓபன் நெட்வொர்க் ப்ரோடோகால் மூலம் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
யூபிஐ போலவே ONDC
மத்திய அரசு டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கு எப்படி யூபிஐ சேவையோ, அதேபோலத் தான் ஈகாமர்ஸ் துறைக்கு இந்த ONDC நெட்வொர்க் என அறிவித்துள்ளது. மேலும் இது அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஈகாமர்ஸ் நிறுவனம்
தற்போது ஒவ்வொரு ஈகாமர்ஸ் நிறுவனமும் தத்தம் கட்டமைப்பில் இயங்கி வரும் நிலையில், ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் இந்தக் கட்டமைப்பு மூலம் தான் அனைத்துவிதமான வர்த்தகத்தையும் செய்ய முடியும்.
9 பேர் கொண்ட குழு
இந்தக் கட்டமைப்பு முலம் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வர்த்தகத்தை எளிதாகக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் எவ்விதமான ஏமாற்று வேலைகளைச் செய்ய முடியாது. இந்தக் கட்டமைப்பை உருவாக்கவும், ஆலோசனை கூறவும் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுவில் நந்தன் நீலகேனி உட்படப் பல அமைப்பின் தலைவர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக