Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணரின் அருளைப் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் கிருஷ்ணரை எப்படி வழிபடணும் தெரியுமா?

How To Worship Lord Krishna As Per Zodiac Signs

விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவானின் ஆசியை ஒருவர் பெற்றால், அவருடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மேலும் அவரது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் ஜென்மாஷ்டமி நாள் தான் கிருஷ்ணரின் அருளைப் பெற மிகச்சிறந்த நாள். ஏனெனில் இந்நாளில் தான் கிருஷ்ண பகவான் பிறந்தார். இந்நாளில் அவருக்கு பிடித்ததை செய்து அவரை மகிழ்வித்தால் அவரது முழு அருளைப் பெறலாம்.

அதுவும் ராசிக்கு ஏற்பட கிருஷ்ணருக்கு பூஜை செய்வது என்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. உங்கள் ராசிக்கு ஏற்ப நீங்கள் கிருஷ்ண பகவானை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாருங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதைக்கு நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் கிருஷ்ணருக்கு பாலால் ஆன பலகாரங்கள், தேங்காயால் செய்யப்பட்ட பலகாரங்களைப் படைக்க வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். மாதுளையை கிருஷ்ணருக்கு பிரசாதமாக பயன்படுத்துவது எல்லா முயற்சிகளிலும் வெற்றியைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, ரசகுல்லா, பேடா போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களை கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் கமல்கட்டா ஜபமாலையைப் பயன்படுத்தி பதினோரு முறை 'ஸ்ரீ ராதா கிருஷ்ண சரணம் மாம்' மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் கிருஷ்ணரின் அருளால் நிறைவேறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பாலால் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் இவர்கள் முந்திரியால் ஆன இனிப்புகள் மற்றும் ஐந்து பழங்களைப் படைக்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு வாழைப்பழத்தை வழங்க வேண்டும் மற்றும் துளசி அல்லது ஸ்படிக ஜபமாலையைப் பயன்படுத்தி 'ஸ்ரீ ராதா கிருஷ்ணாயே நமோ ஸ்வாஹா' என்ற மந்திரத்தை பதினோரு முறை உச்சரிக்க வேண்டும். நீங்கள் கிருஷ்ணருக்கு படைக்கும் பழங்களில் வாழைப்பழமும் இருக்க வேண்டும். இது உங்கள் மரியாதையை சமூகத்தில் அதிகரிக்க உதவும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு நீரால் அபிஷேகம் செய்து, குங்குமப்பூவால் ஆன இனிப்புக்களை படைக்க வேண்டும். முக்கியமாக கோயா பர்பியை வழங்க வேண்டும். அதோடு 'ஸ்ரீ ராதா வல்லபாய நமஹ' என்ற மந்திரத்தை ஐந்து முறை சொல்ல வேண்டும். பழங்களில், நீங்கள் தேங்காய் வழங்க வேண்டும். இது வாழ்க்கையில் அமைதியையும் செழிப்பையும் பராமரிக்க உதவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கங்கை நீரில் தேன் சிறிது கலந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு கிருஷ்ணருக்கு வெல்லத்தைப் படைக்க வேண்டும். இப்படி செய்வது அனைத்து துறைகளிலும் வெற்றியை அடைய உதவும். மேலும் இவை எதிரிகளை வெல்ல உதவும் என்றும் நம்பப்படுகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பாலில் நெய் கலந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் பால் மற்றும் உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட இனிப்புக்களை படைக்க வேண்டும். அதோடு, கிராம்பு, ஏலக்காய், துளசி இலைகள், வெற்றிலை மற்றும் பச்சை காய்கறிகளை கிருஷ்ணருக்கு வழங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது கிருஷ்ணரின் ஆசியுடன், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற உதவுகிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் பாலில் சர்க்கரை சேர்த்து அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த ராசிக்காரர்கள் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்புக்களை வழங்க வேண்டும். மேலும் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும் அதோடு பாதாம் மற்றும் மக்கான் மிஸ்ரியை வழங்க வேண்டும். பழங்களில், ஒரு வாழைப்பழத்தை வழங்கலாம். இது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் வெல்லத்தாலான இனிப்புக்களை கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும். 'ஸ்ரீ ராதா கிருஷ்ணாய நமஹ' என்ற மந்திரத்தை குறைந்தது ஐந்து முறையாவது சொல்ல வேண்டும். பழங்களில் தேங்காயை வழங்க வேண்டும். இது கிருஷ்ணரின் ஆசிகளைப் பெற உதவுவதோடு, விருப்பங்களை நிறைவேற்றவும் உதவும்

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு தேன் மற்றும் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். இவர்கள் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்புக்களை படைக்க வேண்டும். 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை ஜபமாலையைப் பயன்படுத்தி ஐந்து முறை உச்சரிக்க வேண்டும். பழங்களில் வாழைப்பழத்தை வழங்க வேண்டும். இவை கிருஷ்ணனை மகிழ்வித்து, அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற உதவும். அதோடு இந்த ராசிக்காரர்கள் கொய்யாப்பழத்தை கிருஷ்ணருக்கு வழங்குவது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் 'தேவகி சத் கோவிந்தாயே நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பழங்களில் திராட்சையை படைக்க வேண்டும். அதோடு கிருஷ்ணருக்கு இனிப்பு பான் வழங்கலாம். இது கிருஷ்ணரின் ஆசியைப் பெற உதவி, எதிலும் வெற்றி அடைய உதவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் பால் மற்றும் பஞ்சாமிர்தத்தைப் பயன்படுத்தி கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் பாலால் தயாரிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான இனிப்புக்களை படைக்க வேண்டும். 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை பதினோரு முறை உச்சரிக்க வேண்டும். மேலும் இவர்கள் கிருஷ்ணருக்கு முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றை கிருஷ்ணருக்கு வழங்குவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும் மற்றும் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்புக்களை படைக்க வேண்டும். மேலும் ஐந்து பழங்களை கிருஷ்ணருக்கு வழங்க வேண்டும். 'ஓம் தேவகி சத் கோவிந்தாய நம' என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த ராசிக்காரர்கள் மற்ற பழங்களுடன் தேங்காயையும் வழங்கலாம். இது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!