Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

உங்கள் டென்ஷனை மறந்து சிரிக்க... இதை படிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்....!!
-----------------------------------------------------
ராமு : அந்த டாக்டர் ஒரு நாளைக்கு குறைஞ்சது நூறு பேரையாவது பாப்பாரு!
சோமு : அவ்வளவு பிஸியா?
ராமு : நீங்க வேற கிளினிக் வாசல நின்னு, ரோடுல போறவங்களை குறைஞ்சது நூறு போரையாவது பாப்பாருன்னு சொன்னேன்.
சோமு : 😄😄
-----------------------------------------------------

ஆசிரியர் : நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு. ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுகள் ஏறணும்?
மாணவன் : எல்லா படிக்கட்டையும் தான் ஏறணும் சார்!
ஆசிரியர் : 😠😠 
-----------------------------------------------------
டிப்ஸ்... டிப்ஸ்..!!
-----------------------------------------------------
👉 கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது.

👉 காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

👉 மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கீழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

----------------------------------------------------
இது எப்படி இருக்கு?
-----------------------------------------------------
 
நிக்கிற பஸ்ஸஷுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா... ஓடுற பஸ்ஸஷுக்கு முன்னாடி நிக்கமுடியாது.😎

வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்... டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?😇

-----------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------
 
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள் :

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக