Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

பட்ஜெட் விலையில் அடுத்து இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M52 5G மற்றும் F42 5G.. விலை இது தானா?

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சாதனமும் இந்தியாவில் அறிமுகமா?சர்வதேச சந்தைகளில் சாம்சங் பல 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலும் சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் இன்னும் சில 5 ஜி சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையில் அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஆகிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதற்கான ஆதாரங்கள் ஆன்லைனில் தற்போது காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக தயாராகும் புதிய சாம்சங் கேலக்ஸி M52 5ஜி மாடல்

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் தேதி செப்டம்பர் மாதத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. SM-M526B/DS என்ற மாடல் எண் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியத் தரநிலை அலுவலகத்தில் (BIS) காணப்பட்டது. இது சாம்சங் கேலக்ஸி M52 5ஜி மாடலின் மாடல் எண் என்று கூறப்பட்டுள்ளது. பிரபல டிப்ஸ்டர் டெபயன் ராயின் வார்த்தைகளின்படி, கேலக்ஸி எம் 52 5 ஜி செப்டம்பரில் இந்தியாவுக்கு வரலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சாதனமும் இந்தியாவில் அறிமுகமா?

இதே காலத்தில் மற்றொரு எஃப் தொடர் சாதனமும் இந்தியாவிற்கு வரும் என்று டிப்ஸ்டர் கூறினார். அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, புதிய சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சாதனங்களின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம் பற்றிய சில தகவல்களும் தற்பொழுது வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி போனில் என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

மேலும், மற்ற கசிவுகளின்படி, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி சாதனம் 4,860mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 64 எம்பி முதன்மை சென்சார் ஒரு 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் உடன் இணைக்கப்பட்ட வாய்ப்புள்ளது என்று தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சாதனத்தில் என்ன அம்சங்கள் இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சமீபத்தில் கீக்பெஞ்சிலும் காணப்பட்டது. சமீபத்திய பட்டியலின் படி, சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஆனது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது. இந்த சாதனம் கேலக்ஸி ஏ 22 5 ஜி இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எம் 52 5 ஜி யைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட கேலக்ஸி ஏ 52 எஸ் 5 ஜி இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

என்ன விலை புள்ளியில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் எதிர்பார்க்கலாம்?

இந்த கசிவு தகவலை வைத்து பார்க்கையில், புதிய சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சாதனங்களின் அம்சங்கள் பட்ஜெட் விலை பிரிவின் கீழ் வெளிவந்த முந்தைய மாடல்களுடன் ஒற்று போகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி சாதனங்களின் விலை என்னவாக இருக்கும் என்று இணையத்தை ஆராய்ந்த போது, இந்த சாதனங்கள் முறையே ரூ. 21,990 மற்றும் ரூ. 25,515 என்ற விலையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக