Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

இனி 90 நாட்கள்: வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புதிய சேவை- தானாகவே காணாமல் போகும்!

பல்வேறு அப்டேட்களை வழங்கும் வாட்ஸ்அப்

சமூகவலைதள பயன்பாடு என்பது பிரதானமாக மாறிவருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பல்வேறு அப்டேட்களை வழங்கும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. குறிப்பிட்ட அப்டேட்களுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர் என்றே கூறலாம். அதில் அப்டேட்கள் சில வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே இருக்கிறது. 

ஆண்ட்ராய்ட் செயலிக்கான பீட்டா பதிப்பு

தற்போது அது ஆண்ட்ராய்ட் செயலிக்கான பீட்டா பதிப்பில் தானாக மறையும் மெசேஜ்-ன் 90 நாட்கள் விருப்பம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. தனியுரிமை அம்சத்தை விட தானாக மறையும் அம்சம் குறித்த பயன்பாட்டை அதிகமாக்குகிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான தளமாக இருந்தாலும் வாட்ஸ்அப் தனியுரிமை பாதுகாப்பில் சிக்கல் தொடரத் தொடங்குவதாக புகார்கள் எழுந்தது. 

பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

வாட்ஸ்அப் தற்போது பாதுகாப்பு அம்சமாக அறிமுகம் செய்யப்பட்ட தனியுரிமை பாதுகாப்பு அம்சத்தில் கூடுதல் செயல்முறை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பதிப்பு தற்போது பீட்டாவில் சோதனை கட்டமாக இருக்கிறது. அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை "ஒருமுறை பார்க்கவும்" என்ற அம்சத்தையும் அறிமுகம் செய்தது. தற்போது பீட்டா பயன்பாட்டில் இருக்கும் அம்சமானது தாமாக மறையும் மெசேஜ் 90 நாட்கள் செயல்முறையோடு அறிமுகம் செய்ய உள்ளது.

தாமாக மறையும் மெசேஜ்

90 நாட்களில் வரும் தாமாக மறையும் மெசேஜ் ஆனது நிலையான வெளியீடாக வாட்ஸ் அப்பில் வருவதற்கு சில மாதங்கள் ஆகும். இந்த அம்சம் 2.21.17.16 பீட்டா புதுப்பிப்பில் WABetaInfo மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இது நேரலையில் இல்லை என கூறப்படுகிறது. அதில் 24 மணிநேர விருப்பம் காண்பிக்கப்படவில்லை எனவும் 7 நாட்கள் அம்சம் மட்டுமே காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

90 நாட்கள் விருப்பம்

இந்த வளர்ச்சிக்கான விருப்பங்கள் இறுதியாக வரும்போது 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் விருப்பம் என இரண்டோடு சேர்த்து மொத்தம் மூன்று விருப்பங்களாக வரலாம் என தெரிவிக்கப்படுகிறது. "ஒருமுறை பார்க்கவும்" என்ற பயன்பாட்டையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வதன் மூலம் தளம் தங்களின் பயனர்களை பாதுகாப்பை அதிகரிக்க செய்வதை உறுதி செய்கிறது. 

சுய அழிக்கும் படங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் மறைந்துபோகும் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் சுய அழிக்கும் படங்களை பகிரலாம். ஒருவர் அனுப்பும் படம் அவர் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் பெறுநருக்கு அழிந்துவிடும். பெறுநர்கள் இதுபோன்ற அனுப்பப்படும் படங்களை திறந்தவுடன் ஒரு அறிவிப்பையும் காண்பார்கள். இந்த படம் பிற பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் சுய அழிக்கும் படங்களை ஏற்றுமதிக்கு அனுமதிக்காது. 

ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எளிது

இருப்பினும் வாட்ஸ்அப் நிறுவனம் அத்தகைய படத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்தால் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் சேர்க்கவில்லை. அதேபோல் பெறுநர் புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் அனுப்புநருக்கு அது எச்சரிக்கை விடுக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. 

ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் என்ன செய்வது

பயனர்களுக்கு இது தனியுரிமைக் குறித்த பிரதிபலிப்பை ஏற்படுத்துவது போல் தவறான உணர்வை கொடுப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனர்களுக்கு படங்களை அழிக்கும் அம்சம் வழங்கினாலும் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் எழுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக