
இதில் ஒன்று ஓலா எஸ்1, மற்றொன்று சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் ‘ஒன்' எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இவை இரண்டிற்கும் போட்டியாக பஜாஜ் சேத்தக் இவி, டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் எனர்ஜி 450எக்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே விற்பனையில் உள்ளன.
இவற்றிற்கு இணையான செயல்திறனில், தொழிற்நுட்பங்களுடனே சிம்பிள் இ-ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் குறிப்பாக சிம்பிள் ஒன் மாடலுக்கும், ஏத்தர் 450எக்ஸ் மாடலுக்கும் இடையேயான ஒப்பீடு சுவாரஸ்யமானதாக இருக்கும்.
ஏனெனில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக கூர்மையான லைன்களை அதிகளவில் கொண்டுள்ளன. ஏத்தர் 450எக்ஸ்-ஐ சமாளிக்கும் அளவிற்கு சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னென வசதிகள் உள்ளன? என்பதையும், இவை இரண்டிற்கும் இடையேயான வேற்றுமை, ஒற்றுமைகளையும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.
தோற்றம்
என்ன தான் இந்த ஏத்தர் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு மிக ஸ்டைலிஷாக இருப்பினும், சிம்பிள் ஒன் அதனை காட்டிலும் மிகவும் அட்வான்ஸான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் தோற்றத்தை பல ஆண்டுகளுக்கு மெருக்கேற்ற வேண்டிய வேலை சிம்பிள் எனர்ஜி நிறுவனத்திற்கு இருக்காது.
சிம்பிள் ஒன் மாடலை போன்று, ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரும் மேக்ஸி-ஸ்கூட்டரால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரே ஆகும். ஆனால் முன்பக்க ஹெட்லைட் விளக்கு பகுதி ஏத்தர் மாடலில் சற்று பெரியது. இவை இரண்டிற்கும் தலா நான்கு பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
பவர்ட்ரெயின்
சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் (6.1 பிஎஸ்), 4.8 kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி கொண்டால் அதிகப்பட்சமாக 236கிமீ தூரத்திற்கு (நகர போக்குவரத்தில் சற்று குறையலாம்) பயணிக்கலாம் என்கிறது சிம்பிள் எனர்ஜி. ஒன் இ-ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 105கிமீ வேகத்தில் செல்லலாம்.
மறுபக்கம், 2.9 kWh பேட்டரி உடன் 6 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் (8.16 பிஎஸ்) ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரில் பொருத்தப்படுகிறது. இவற்றின் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லலாம். இந்த ஏத்தர் இ-ஸ்கூட்டரின் ரேஞ்ச் 85கிமீ ஆகும்.
தொழிற்நுட்ப வசதிகள்
7-இன்ச் தொடுத்திரை உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ப்ளூடூத் மற்றும் வை-பை இணைப்பு வசதி, ரிமோட் ஆக்ஸஸ், எல்இடி விளக்குகள் என ஏகப்பட்ட கவர்ச்சிகரமான வசதிகளையும், சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்பக்கத்தில் மோனோஷாக்கையும் சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் கிட்டத்தட்ட இதேபோன்று தான் பயண நிலை, வரைப்படம், வாகனம் இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி உள்ளிட்டவை அடங்கிய 7-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும், எல்இடி-இல் விளக்குகளையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வழங்குகிறது.
விலை
சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.10 லட்சமாக தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைவான விலை மற்ற போட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடும் நெருக்கடியை அளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், குஜராத்தில் இந்த இ-ஸ்கூட்டரின் விலை 1 லட்சத்திற்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.32 லட்சமாக உள்ளது. இது உண்மையில் சற்று அதிகமாகும். இந்த ஒப்பீடுகையை வைத்து பார்த்தோமேயானால், சிம்பிள் ஒன், ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டரை சில விஷயங்களில் முந்துவது போன்று உள்ளது. எதையும் இப்போதே நாம் தீர்மானித்து விட வேண்டாம், பொறுத்திருந்து பார்ப்போம்.
எப்படியிருந்தாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்கும் விதத்திலான மத்திய அரசின் சமீபத்திய ஃபேம்-2 திட்ட திருத்தம் மற்றும் சில மாநில அரசாங்கங்களின் மானியங்கள் அறிவிப்பினால் இனி வரும் நாட்களில் நல்லப்படியாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக