Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

மாஸ்டர் தி பிளாஸ்டர்: 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 65W சூப்பர் சார்ஜிங் உடன் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்!

பல்வேறு உயர்தர அம்சங்கள்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778 ஜி 5 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது மாஸ்டர் எடிஷன் சாதனமாகும், இந்த ஸ்மார்ட்போன் 65 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் டைனமிக் ரேம் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் டீஸ் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு உயர்தர அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு உயர்தர அம்சங்களோடு வருகிறது. ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.27,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி குறித்து பார்க்கையில் இதன் முதல் விற்பனை 26 ஆகஸ்ட் அன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. முதல் விற்பனை இந்த தளத்தில் தொடங்கும் என்பது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனு பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக சலுகைகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் Voyager Grey வண்ண விருப்பத்தில் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.43 இன்ச் முழு அமோலெட் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்து 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என்ற மூன்று கேமரா அம்சங்களோடு வருகிறது. செல்பி வசதிக்கென இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி முன்புற கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா ஆனது சூப்பட் நைட் பயன்முறை, பனோரமிக் வியூ, எக்ஸ்போர்ட், டைம்லாப்ஸ், போர்ட்ரைட் மோட், எச்டிஆர், அல்ட்ரா வைட், ஏஐ பியூட்டி, சூப்பர் டெக்ஸ்ட், ஃபேஸ் டிஸ்டார்ஷன் ஆகியவை கொண்டுள்ளது. இதன் வீடியோ அம்சத்தை பொறுத்தவரை இதன் வீடியோ ரெக்கார்டிங் அம்சமானது அல்ட்ரா ஸ்டெடி வீடியோ, போர்ட்ரைட் மோட் ரெக்கார்ட செய்ய அனுமதிக்கிறது. ஃபில்டர், நைட் மோட், பொக்கே, எச்டிஆர் ஆதரவோடு செல்பி கேமரா இருக்கிறது.

65 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜிங்

65 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜிங் அம்சத்தோடு இது வருகிறது. இதில் வயாஜெட் க்ரீன் வண்ண விருப்பத்தில் டூயல் சிம் ஆதரவோடு வருகிறது. இதன் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 91.7 விகித பாடி டூ ஸ்க்ரீன் அளவு விகிதம் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவை கொண்டிருக்கிறது. இரட்டை நானோ சிம் கார்ட், ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ வி2.0 ஆதரவுடன் வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஒரு வருட வாரண்டி மற்றும் 6 மாத அக்சஸரிஸ் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக