Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர் மாவட்டம்.

Temple : Temple Details | - | Tamilnadu Temple | ஒப்பில்லாத அம்மன்
அமைவிடம் :

இன்றும் அரியலூர் மாவட்டத்தில் ஒப்பில்லாத அம்மன் கோவில் ஆனது மிக பிரபலமாக உள்ளது. ஒப்பில்லாத அம்மன் ஏழு கன்னிமார்களின் அம்சம் ஆகும். ஏழு கன்னிமார்களின் ஒருவர்தான் இந்த ஒப்பில்லாத அம்மன்.

மாவட்டம் : 

அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

அரியலூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒப்பில்லாத அம்மன் கோயில் தெரு. நடந்தே சென்று விடலாம்.

கோயில் சிறப்பு :

கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரிய பெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.

கருவறையில் சப்த கன்னியர் இருக்கிறார்கள். அருகிலுள்ள சன்னதியில் பத்ரகாளியம்மன் சீற்றம் சிறிதும் இல்லாமல் சிரித்த முகத்தினினளாகக் காட்சியளிக்கிறாள். 


கணபதி, கந்தன் சன்னதியும் அமைந்துள்ளது. வெளியில் முனியப்பசாமி, அய்யனார், கருப்பனார் சன்னதிகள் உள்ளன.

ஒப்பில்லாத அம்மன் ஏழு கன்னியர்களின் அம்சம் என்பதால் ஓர் உருவே ஏழுருவானதாகச் சொல்கிறார்கள். 

மஞ்சள், குங்குமம், வளையல் சாற்றி அம்மனை வழிபடுவோர்க்கு வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடுவது நிச்சயம் என்று சொல்கிறார்கள்.

கோயில் திருவிழா : 

சித்திரை, ஆடி ஆகிய மாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

பிரார்த்தனை : 

வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடவும், சகல செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 

நேர்த்திக்கடன் : 

மஞ்சள், குங்குமம், வளையல் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். பொங்கலிட்டு வணங்கினால் சகல செல்வங்களும் பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கிருக்கும் காவல் தெய்வங்களின் சன்னதியில் தான் பலி நேர்த்திக்கடன் நடத்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக