Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

இதுதான் Spare wheel-ஆ? வழக்கு போட்டு டீலரிடம் இருந்து பணத்தை பெற்ற கேரள வாடிக்கையாளர்!!

இதுதான் Spare wheel-ஆ? வழக்கு போட்டு டீலரிடம் இருந்து பணத்தை பெற்ற கேரள வாடிக்கையாளர்!!

உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தை என பார்த்தோமேயானால், அதில் இந்தியாவும் நிச்சயமாக ஒன்று. இதனால் தான் ஒவ்வொரு வருடமும் புதிய கார் பிராண்ட்கள் நம் நாட்டு சந்தையில் களம் புகுகின்றன.

இதனால் காலம் செல்ல செல்ல பிராண்ட்களின் மாற்றத்தால் கார்களின் ஸ்டைலும் மாறுகிறது, வாடிக்கையாளர்களின் விருப்பமும் மாறுகிறது. அதாவது ஒரு காலத்தில் நமது இந்திய சந்தை மட்டுமின்றி பல வெளிநாட்டு சந்தைகளிலும் செடான் கார்களின் ஆதிக்கமாக இருந்தது.

ஆனால் இப்போது புதியது புதியதாக எஸ்யூவி ரக கார்களே அதிகளவில் அறிமுகமாகுகின்றன. அதேபோல் 20, 25 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் கார்கள் உடன் முழு-அளவு சக்கரம் ஒன்று கூடுதலாக வழங்கும் வழக்கத்தை தயாரிப்பு நிறுவனங்கள் வைத்திருந்தன. இதனாலேயே அந்த சமயத்தில் கூடுதல் சக்கரத்தை பின்பக்கத்தில் வெளியே கொண்ட கார்களை அதிகளவில் பார்க்க முடிந்தது.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மிகவும் சில கார்களில் மட்டுமே கூடுதல் சக்கரம் வழங்கப்படுகிறது. அதிலும் நிறைய கார்களில் அலவில் சிறிய கூடுதல் சக்கரமே கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் செய்வது தவறு என்பதை உணர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் காசார்கோட் பகுதியை சேர்ந்தவர் சி.மாதவன். ஆம் இவர் தான் இந்த கதையின் ஹீரோ. இவர் சமீபத்தில் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். வாங்கும்போது காருடன் கூடுதல் சக்கரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொடுக்கப்பட்டதோ வழக்கம்போல் சிறிய அளவிலான கூடுதல் சக்கரம்.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த மாதவன், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், அளவில் சிறிய சக்கரம் வாகனத்தின் ஹேண்ட்லிங்கை பாதிக்கக்கூடியது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி எந்தவொரு மெக்கானிக் கடையும் இல்லாத பகுதியில் வாகனம் பஞ்சர் ஆகினால் கூடுதல் சக்கரத்தால் எந்தவொரு பயனும் இல்லை. இதனையும் வழக்கில் சேர்ந்து கொண்ட நீதிபதிகள், மாதவன் வாங்கிய காரின் விலையில் ஸ்டெப்னி அல்லது ஸ்பேர் சக்கரத்திற்கான தொகையும் உள்ளதாகவும், ஆதலால் முழு-அளவு கூடுதல் சக்கரத்தை வழங்க வேண்டியது தயாரிப்பு நிறுவனத்தின் கடமை என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம்/ டீலர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், காரில் கூடுதல் சக்கரம் அல்லது Space Saver எனப்படும் காரை பஞ்சரான இடத்தில் இருந்து மெக்கானிக் கடை வரையில் கொண்டு செல்ல உதவும் சக்கரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த காசர்கோடு நுகர்வோர் நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வாடிக்கையாளரின் பக்கம் வழங்கியது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, முழு-அளவு கூடுதல் சக்கரம் வழங்காததற்காக ரூ.20,000மும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து செலவு செய்ததற்காக ரூ,5,000மும் சேர்த்து மொத்தமாக ரூ.25,000-ஐ மனுதாரர் சி.மாதவனுக்கு கார் தயாரிப்பு நிறுவனம் அல்லது டீலர் வழங்க வேண்டும்.

வழக்கு தொடரும் அளவிற்கு காசர்கோடு பகுதியை சேர்ந்த சி.மாதவன் அப்படி என்ன கார் வாங்கினார் என்பது தெரியவில்லை. கடந்த ஆண்டு, இந்திய அரசாங்கம் மோட்டார் வாகன விதிகளில் காரின் உதிரி சக்கரம் தொடர்பான திருத்தம் ஒன்றை செய்திருந்தது. அதாவது, காரின் பின்பக்கத்தில் கூடுதல் சக்கரம் வெளியே தெரியும்படி வழங்கப்படுவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என திருத்தி கொள்ளப்பட்டது.

இதற்கு பதிலாக, 8 பேர் அமரக்கூடிய கார் என்றால், டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு அல்லது பழுதுபார்க்கும் கருவி உடன் Tubeless டயர்களை காரில் வழங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் காரணமாகவே, Ford நிறுவனம் அதன் பிரபலமான Ecosport காரில், உதிரி சக்கரத்தை பின் கதவில் பெற்றுவராத புதிய SE வேரியண்ட்டை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

Ford Ecosport காருக்கு கொண்டை போன்ற அதன் பின்பக்க-கூடுதல் சக்கரம் தான் அழகாகும். ஆனால் இதற்கு புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் எதிராக அமைந்துவிட்டது. இதற்கு பதிலாக அரசாங்கம் கூறியதுபோல், பஞ்சர் ஆகினால் பழுது பார்ப்பதற்கு தேவையான கருவிகள் Ecosport SE காருடன் வழங்கப்படுகின்றன.

இந்த திருத்தம் முக்கியமாக எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகும். அதாவது, பின்பக்கத்தில் கூடுதல் சக்கரத்தை வழங்காமல் இருந்தால் தான் கேபினை நன்கு விசாலமானதாக கொண்டுவர முடியும். விசாலமான கேபின் இருந்தால் தான் அதிக ட்ரைவ் ரேஞ்சை வழங்கக்கூடிய பெரிய அளவிலான பேட்டரியை காரில் பொருத்தும் முடிவிற்கு தயாரிப்பு நிறுவனங்கள் வரும் அல்லவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக