
இந்தியாவில் 7 இருக்கைகள் வசதி உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த மேலும் விபரங்களை அறிந்து கொள்ள பதிவிற்குள் போகலாம், வாங்க.
இந்தியாவில் கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. மலிவு விலை, அதிக சிறப்பு வசதிகள் கொண்ட காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதை அறிந்த முன்னணி வாகன உற்பத்தி வாகனங்கள் அதிக இருக்கைகள் மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட கார்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றனர்.
குறிப்பாக குடும்பத்துடன் அதிகமாக பயணிக்க விரும்புவோர்களைக் கவரும் வகையில் சில முன்னணி நிறுவனங்கள் போட்டிக் கொண்டு அதிக இருக்கைகள் வசதிக் கொண்ட கார்களை இந்தியர்களுக்காக களமிறக்கி வருகின்றன. அந்தவகையில், தற்போது இந்தியாவில் ஏழு இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 கார்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
2021 Tata Safari
இந்திய சந்தையில் 7 இருக்கை வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் 2021 Tata Safari-யும் ஒன்று. இந்த கார் தற்போது புதிய நவீன தோற்றத்தில் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆனால், இக்கார் தற்போது வெறும் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஆம், Tata Safari பெட்ரோல் எஞ்ஜின் கிடைக்கவில்லை. அதேசமயம், மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் கைரோடெக் டர்பாசார்ஜட் டீசல் எஞ்ஜின் தேர்விலேயே Tata Safari கிடைக்கிறது. இந்த எஞ்ஜின் 170 பிஎச்பி மற்ரும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
Hyundai Alcazar
Hyundai Alcazar எஸ்யூவி இந்தியாவில் ஏழு மற்றும் ஆறு இருக்கை வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த கார் அதிக கவர்ச்சியான மற்றும் சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. முக்-கொம்பு வடிவிலான புரஜெக்டர் ஹெட்லேம்ப், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணயைான சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்டவை Alcazar-க்கு வழங்கப்பட்டுள்ளது.
Hyundai நிறுவனம் Alcazar எஸ்யூவி காரில் Nu 2 லிட்டர் எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 153 பிஎச்பி மற்றும் 191 என்எம் டார்க்கை வெளியேற்றும் கொண்டது. இதேபோன்று இந்த கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த எஞ்ஜின் கொண்ட Alcazar அதிகபட்சமாக 113 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இரு எஞ்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றது.
Renault Triber
நாட்டின் மலிவு விலை அதிக இருக்கைகள் கொண்ட காராக Renault Triber இருக்கின்றது. இந்த கார் மலிவு விலைக் கொண்ட கார் மாடல் மட்டுமல்ல. இது அதிக பாதுகாப்பு திறன் கொண்ட வாகனமும் கூட. ஆமாங்க, ரெனால்ட் ட்ரைபர் காரை அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஸ் டெஸ்டிற்கு உட்படுத்தியது.
இந்த மோதல் பரிசோதனையில் Renault Triber கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர பாதுகாப்பு சான்றை பெற்றது. இத்தகைய சிறப்பு மிக்க வாகனமே ரெனால்ட் ட்ரைபர். இந்த கார் ஏழு இருக்கை வசதிகளுடன் நாட்டிலி விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், ஐந்து வேக கட்டுப்பாடு மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகளில் Renault Triber விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காரை சாவியில்லா நுழைவு, அதிக பூட் ஸ்பேஸ் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் Renault விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
Mahindra Bolero
இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களில் Mahindra Bolero-வும் ஒன்று. இந்த கார் தற்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் சிறப்பு வசதிகளுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக அதி இருக்கை வசதிகளுடனும் Mahindra Bolero விற்பனைக்குக் கிடைக்கிறது.
Mahindra நிறுவனம் Bolero காரில் 1.5 லிட்டர் எம்ஹாவ்க் 100 டீசல் பிஎஸ்6 எஞ்ஜினை பயன்படுத்துகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 75 பிஎச்பி மற்றும் 210 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினை 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே Mahindra விற்பனைக்கு வழங்குகின்றது.
Mahindra XUV700
மேலே பார்த்த அனைத்து கார்களுக்கும் போட்டியாக Mahindra XUV700 இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இன்னும் காருக்கான புக்கிங் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை. இது மிக விரைவில் தொடங்க இருக்கின்றது. அதேசமயம், ஏற்கனவே விற்பனையாளர்கள் சிலர் இக்காருக்கான புக்கிங் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் தொடங்கியிருக்கின்றனர்.
ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த கார் பல்வேறு சிறப்பு தொழில்நுட்பங்களை தாங்கிய வாகனமாக அறிமுகமாகியிருக்கின்றது. ADAS தொழில்நுட்பம், புதிய வித ஹேண்டில் என பல சிறப்பு வசதிகள் இதில் உள்ளன.
தொடர்ந்து, ஏழு மற்றும் ஐந்து இருக்கை வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்விலும் இதில் வழங்கப்பட இருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி Mahindra XUV700 ரூ. 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக