
தற்போது அமேசான் அலெக்சா பயனர்கள் அமிதாப் பச்சனுடன் பேசலாம். அமேசான் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அதன் அலெக்சா சாதனத்தில் 78 வயதான பாலிவுட் நட்சத்திரத்தின் குரல் அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்போதுள்ள பயனர்களை மகிழ்விப்பதற்கு இந்த அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் தனது அலெக்சா சாதனத்தில் பிரபல குரல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
அலெக்சாவில் அமிதாப் பச்சனின் குரல்
இதேபோன்ற அம்சத்தை அமேசான் 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான சாமுவேல் எல். ஜாக்சனின் குரல் ஆதரவை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. அமேசான் அலெக்சாவில் அமிதாப் பச்சனின் குரலை எவ்வாறு பயன்படுத்துவது என்று குறித்து பார்க்கலாம், அலெக்சாவில் அமிதாப் பச்சன் குரல் ரூ.149 (எம்ஆர்பி ரூ.299) ஆக இருக்கிறது. இது ஒரு வருடத்திற்கான அணுகல் விலை ஆகும். பிரபல குரலை வாங்குவதற்கு நீங்கள் "அலெக்சா என்னை அமிதாப் பச்சனுக்கு அறிமுகப்படுத்துங்கள்" என கூறவேண்டும். மேலும் அமேசான் தளத்தில் இருந்தும் நேரடியாக பெறலாம். கட்டணம் முறை உறுதி செய்யப்பட்டவுடன் நீங்கள் நடிகரின் குரலுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கலாம்.
அமிதாப் பச்சன் குரல் உடன் தொடர்பு கொள்ளலாம்
அலெக்ஸா, எனபில் அமித் ஜி (Enable Amit ji) என்ற வார்த்தையை கூறி., அமிதாப் பச்சன் குரல் உடன் தொடர்பு கொள்ளலாம். அலெக்ஸா என்ற வார்த்தையை பயன்படுத்தி குரல் அசிஸ்டெண்டை தொடங்கலாம். கடந்தாண்டு செப்டம்பரில் முறையாக அறிவிக்கப்பட்ட அமேசான், சில மாதங்களாக அலெக்சாவில் பச்சனின் குரலை இயக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த அம்சம் பயனர்களை மகிழ்விக்கவும், புதிய பயனர்களை ஈர்க்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
அலெக்சா டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட்
அமேசான் இந்தியா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் இந்தியா அலெக்சா டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட்டை அறிமுகம் செய்தது. அலெக்சா அசிஸ்டென்ட் தற்போது ஆங்கிலம், இந்தி மற்றும் ஹிங்கிலீஷ் (இந்தி ஆங்கிலம் கலவை) ஆகிய மொழிகளில் தொடர்பு கொண்டு பேசலாம்.
அலெக்சாவில் பல்வேறு அம்சங்கள்
மேலும் 2019 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது அலெக்சாவின் பயன்பாடு 2020 ஆம் ஆண்டில் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என அமேசான் தெரிவித்துள்ளது. அலாரம் வைத்துக் கொள்வது, இசை வாசிப்பது, ஸ்மார்ட் விளக்குகள் மற்றும் சாதனங்களை கட்டுபடுத்துவது ஆகிய அம்சங்கள் உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமேசான் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அமேசான் எக்கோ ஸ்பீக்கர்களின் மூன்றாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
நிகழ்நேர தகவல்
கிரிக்கெட் ஸ்கோர் நிகழ்நேர தகவல், பிரேக்கிங் செய்திகள் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக அறிந்து கொள்வதற்கு அலெக்சாவை தொடர்பு கொள்ளலாம். மேலும் மெட்ரோ இல்லாத நகரங்களிலும் அலெக்சா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது நாட்டின் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க உதவியாக இருந்ததே என்றே கூறலாம்.
அலெக்சா ஐ லவ் யூ
இதில் குறிப்பாக அமேசான் அலெக்சா வாடிக்கையாளர்களை அதிகரித்து வருகிறது. மேலும் அலெக்சாவில் அதிகமுறை பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து பார்க்கையில், ஒரு நாளைக்கு சுமார் 19,000 முறைகள் அலெக்சா ஐ லவ் யூ எனவும் தினமும் 6000 முறை என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக