Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 30 செப்டம்பர், 2021

வெற்றி... தோல்வி... எப்போதும் சொல்ல வேண்டிய தாரக மந்திரம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------------

வாசு : ஆடி மாத கோர்ட்டில் கேஸ் போடாதே என்று சொன்னனே! கேட்டியா?
விசு : ஏன்.. என்ன ஆச்சு?
வாசு : தள்ளுபடி ஆயிடுச்சு!
விசு : 😜😜 
---------------------------------------------
ராமு : எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.
சோமு : அவ்வளவு சுறுசுறுப்பா?
ராமு : ஊஹும், அவருக்கு மூல வியாதி.
சோமு : 😅😅
---------------------------------------------
இதுவும் கடந்து போகும்...!!
---------------------------------------------
தோல்வி என்பது அசிங்கமும் அல்ல, அவமானமும் அல்ல, தோல்வி என்பது அனுபவம்... தோல்வி வரும் என்று அஞ்சி பின் வாங்குவது தான் அசிங்கம், அவமானம்.

வெற்றிகள் கிடைக்கும் போது 'இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது 'இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து போகமாட்டீர்கள்.

எதிலும் பரபரப்பு தேவையில்லை.. ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை. 

பயத்திலும், பதற்றத்திலும் செயல்படாதீர்கள், ஒருபோதும் வெல்ல முடியாது. நின்று நிதானமாக யோசித்து செயல்படுங்கள். உங்களை வெல்ல எவரும் இல்லை இங்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!