Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 அக்டோபர், 2021

மகரத்தில் சனி நேர்பாதையில் செல்வதால் இந்த ராசிகளுக்கு மோசமா இருக்குப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?

Saturn Direct In Capricorn on 11 October 2021 Effects and Remedies on 12 Zodiac Signs In Tamil

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி. வேத ஜோதிடத்தில், சனி கிரகங்களிலேயே மிகவும் முக்கியமான கிரகமாகும். ஏனெனில் இது ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு செல்ல நீண்ட காலம் எடுக்கும். ஆகையால் அதன் தாக்கம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. சனி பகவான் ஒருவரிடன் கர்மத்திற்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர்.

இத்தகைய சனி பகவான் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்று அதிகாலை 3.44 மணிக்கு நேர் பாதையில் மகர ராசியில் பயணிக்க ஆரம்பித்து, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார். இப்போது மகரத்தில் நேரான பாதையில் பயணிக்கும் சனிபகவானால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்

இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் சில ஸ்திரத்தன்மையும் வளர்ச்சியும் இருக்கும். கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். ஆனால், இக்காலத்தில் சம்பாதிக்கும் லாபம் மெதுவாக இருக்கும் மற்றும் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியாது. சொத்து தொடர்பான சச்சரவுகள் இருக்கும். அமைதியாக இருந்து பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். உறவுகள் அழகாகவும், நிலையானதாகவும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு நிலையான இடத்தை உருவாக்க வேண்டும். இக்காலம் உங்களுக்கு அதிர்ஷ்டமான காலம். உங்கள் வழிகாட்டிகளுடனான உங்கள் உறவு நன்றாக இருக்காது. இக்காலத்தில் ஒரு நீண்ட கால முதலீட்டை திட்டமிட்டால், அது நல்ல பலனளிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளில் சிக்கல்களை காணலாம். உங்களின் கசப்பான அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வீர்கள் மற்றும் அது உங்களைப் பற்றிய வலுவான பதிப்பாக மாறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, இதுவரை அவர்களின் வழியில் இருந்த தடைகள் நீங்கும். இக்காலம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்காது. உங்களை உங்களின் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்காது என்பதால், இக்காலத்தில் எதிலும் சாதகமான முடிவுகளைப் பெறமாட்டீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் துணையுடனான உறவுகள் நன்றாக இருக்கும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே, இக்காலத்தில் நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டால், சரியான துணையை இக்காலத்தில் பெறுவீர்கள். திருமணமானவர்கள், தங்கள் மாமியார்-மாமனாரால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். உடன் பணிபுரிபவர்களுடன் சில மோதல்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உங்களுக்கு ஒதுக்கப்படும் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் பணியிடத்தில் சில சிறந்த வாய்ப்புக்கள் உங்களுக்கு கிடைக்கும். இது உங்கள் தொழிலுக்கு வலிமை தரும். நீங்கள் இக்காலத்தில் சற்று கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் இதுவரை சவால்களை சந்தித்தால், அவை விரைவில் முடிவடையும். உங்களின் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புக்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சைகள் இருக்கலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் துணையுடன் அடிக்கடி சண்டை ஏற்படலாம். ஆனால், நீங்கள் அமைதியாகவும் சமநிலையுடனும் இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இக்காலத்தில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் குழந்தைகளுடனான பிணைப்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு மேம்படும். ஏனெனில் உங்கள் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்களின் முயற்சிகள் இக்காலத்தில் வீணாகாது. எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேலும் புதிய முயற்சிகளில் இறங்கி உங்கள் திறமைகளை ஆராய்வீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்கும். வணிக நோக்கங்களுக்காக ஒரு நிலம் அல்லது வாகனத்தை வாங்குவீர்கள். உங்கள் தாயுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வீர்கள். நீங்கள் ஒழுக்கமாகவும், வீட்டில் அமைதியாகவும் இருப்பீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், கடினமாக உழைத்தால் வெற்றியை நிச்சயம் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். நீங்கள் அவர்களின் தொழில்முறை இலக்குகளை நோக்கி செயல்படுவீர்கள் மற்றும் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் இக்காலத்தில் கடந்த காலத்தின் சில கசப்பான அனுபவங்கள் வரிசைப்படுத்தி போக்க வேண்டும். உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, நிதி தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம். சில அறியப்படாத மூலங்களில் இருந்து பணத்தைப் பெறலாம். ஒருவருடன் தொடர்பு கொள்ளு போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்களின் மூதாதையர் சொத்தில் இருந்து சம்பாதிக்க வாய்ப்புள்ளது. கடினமான சூழ்நிலைகளைத் தவிர்க்க சிறிய விஷயங்களுக்கெல்லாம் பொய் சொல்லாதீர்கள். உங்கள் குழந்தைகளை கட்டுப்படுத்தாமல், அவர்களை ப்ரீயாக விடுங்கள். இல்லையெனில், இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையிலான தூரத்தை அதிகரிக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, இதுவரை தடைபட்டு வந்த உங்களின் வேலை நிறைவடையும் மற்றும் நீங்களும் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வைக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் சில கடுமையான விதிகளை நீங்கள் செயல்படுத்துவீர்கள். உங்கள் உடன்பிறப்புகள் சில உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் நீங்கள் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்களுக்கு வணிகம் தொடர்பான தொடர்புகள் இருந்தால், நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அதே வேளையில் மோசமான செலவுகள் குறித்து கவனமாக இருங்கள். உங்கள் தொழில் சவால்கள் மற்றும் தடைகள் முடிவடையும் மற்றும் நீங்கள் சுமூகமாக வேலை செய்வீர்கள். உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்கள் பிணைப்பு நன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் எதிரிகளைப் பற்றி கவனமாக இருங்கள், அவர்களை எந்த வகையிலும் வெல்லவிடாதீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பல்வேறு மூலங்களில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்கள் துணையுடனான உங்கள் உறவுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் கனவுகள் நிறைவேறும். உங்கள் போராட்டங்களும் சவால்களும் முடிவடையும். சட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் மற்றும் புதிய வாய்ப்புக்களும் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக