Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 அக்டோபர், 2021

வாய்ப்புகளை எப்படி உருவாக்க வேண்டும்... யார் திறமைசாலி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்....!!

----------------------------------------------
நீதிக்கதை...!!
----------------------------------------------

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. 

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், 'பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, 'அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது. 

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது : 'நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்".

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
----------------------------------------------
இது எப்படி இருக்கு?
----------------------------------------------
அதுவா வளரும்போது காசு கொடுத்து வெட்டுறோம்...
அதுவா கொட்டும்போது காசு கொடுத்து வளர்க்கிறோம்...
 
தலைமுடி💇...

பர்ஸ்ல உள்ள காசையெல்லாம் வாங்கிக்கிட்டு,
ஒரு புது காலி பர்ஸ்-ஐ கொடுப்பாங்க பாருங்க...
 
அவங்க தான் நகை கடைக்காரங்க👤...
----------------------------------------------
யார் திறமைசாலி தெரியுமா?
----------------------------------------------

என் மனைவிக்கு கோபம்😡 வந்தா அவ அம்மா வீட்டுக்குப் போயிடுவா🙅....

நீங்க என்ன பண்ணுவீங்க💁...

கோபம்😡 வர்ற மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டே😄 இருப்பேன்....

வாய்ப்புக்காக காத்திருக்காமல்...✌ வாய்ப்புகளை உருவாக்குபவனே திறமைசாலி....🙌

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக