இந்த கோயில் எங்கே அமைந்துள்ளது?
இத்தலம் கர்நாடக மாநிலத்தில், உத்தர் கன்னடா மாவட்டத்தில், திருக்கோகர்ணம் எனும் ஊரில் மேற்குக் கடற்கரையில் உள்ளது.
இந்த கோவிலுக்கு எப்படி செல்வது?
சென்னை, மதுரை, கோவை, பாலக்காட்டில் இருந்து மங்க;ரு சென்று, அங்கிருந்து உடுப்பி வழியாக செல்லும் பேருந்துகளில்; பயணம் செய்தால் திருக்கோகர்ணத்தை அடையலாம்.
சென்னையிலிருந்து புகைவண்டி மூலம் செல்வதாயின், குண்டக்கல் வழியாக ஹுப்ளி சென்று, அங்கிருந்து பேருந்தில் ஏறி திருக்கோகர்ணத்தை அடையலாம்.
கோகர்ணம் பெயர் எப்படி வந்தது?
கோ-பசு, கர்ணம்-காது, சுவாமி பசுவின் காதுபோல குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் என்ற பெயர்களும் உண்டு.
அப்படி என்ன சிறப்பு இந்த கோவிலில்?
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். துளுவ நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் இதுவாகும். மேலும் அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 267வது தேவாரத்தலம் ஆகும்.
அதுமட்டுமல்லாமல் கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் இங்குள்ளது. இந்த சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம்.
இக்கோவிலில் மரணமடைந்தவர்களுக்காக தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது.
மூலஸ்தானத்தின் நடுவில் சதுரமேடை... அதில் வட்டமான பீடம்... இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சொர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம் என்பர்.
இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கை அளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.
விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோல குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
வேறென்ன சிறப்புகள்?
கைலாயத்தில் சிவன்... மலை வடிவிலும், அம்பிகை... நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும், அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்மனே இங்கு நதியாக ஓடுவதாக கூறப்படுகிறது.
இத்தலத்தில் செய்யப்படும் ஒரு புண்ணிய காரியம் கோடி மடங்கு செய்ததற்கான பலன் தருமாம்.
சிவன் இத்தலத்தில் தானே தோன்றியதால் மற்ற சிவத்தலங்களை விட மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
என்னென்ன திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது?
மாசி சிவராத்திரியில் 9 நாள் திருவிழா. முதல் நாள் தேர்த்திருவிழாவும், 8ம் நாள் பிரமோற்சவமும் நடைபெறுகிறது.
கார்த்திகை பௌர்ணமியில் திரிபுரதகன விழா ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இங்கு வழிபட்டால் எந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்?
இத்தலம் சிவ-பார்வதி திருமணத்தலம் ஆதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.
இங்கு என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தலாம்?
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக