Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 12 அக்டோபர், 2021

பூண்டு ஓம பொடி

Poondu Oma Podi Recipe In Tamil

மாலை வேளையில் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? ஆனால் பஜ்ஜி, போண்டா வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படியானால் பூண்டு ஓம பொடி செய்து கொடுங்கள். பொதுவாக நீங்கள் கடைகளில் தான் ஓம பொடியை வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். அதுவும் பூண்டு ப்ளேவர் இருக்கும் ஓம பொடியை சுலபமாக செய்யலாம். முக்கியமாக இது தீபாவளி பண்டிகையின் போதும் செய்யக்கூடியது.

தேவையான பொருட்கள்:

* பூண்டு - 6 பல்

* ஓமம் - 2 டீஸ்பூன்

* கடலை மாவு - 2 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு மற்றும் ஓமத்தைப் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி வைத்துள்ள சாற்றினை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை இடியாப்பம் பிழியும் குழலில் போட்டு எண்ணெயில் நேரடியாக பிழிந்து, நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.

* இதேப் போல் அனைத்து மாவையும் பிழிந்து எடுத்து குளிர வைத்து, பின் கையால் நொறுக்கி விட்டால், பூண்டு ஓம பொடி தயார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக