Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 19 நவம்பர், 2021

விமான விபத்து: தந்தை, மகளை காப்பாற்ற சரியான நேரத்தில் உதவிய ஐபேட்.!

தகவலின்படி, கடந்த சில நாட்களுக்கு

இப்போது உள்ள சில தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு பென்சில்வேனியாவில் ஒற்றை எஞ்சின் விமானம் விபத்துக்குள்ளானதில் மணிக்கணக்காக காணமல் போன தந்தையும் மகளும் ஐபேடில் இருந்து வந்த சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

வெளிவந்த தகவலின்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்சில் வேனியாவின் பிட்ஸ்டன் டவுன்ஷிப்பில் இருக்கும் வில்கஸ்-பார் ஸ்க்ரான்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட செஸ்னா 150 விமானத்தில் பைலட், ஒரு ஆண் மற்றும் அவரது 13 வயது மகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

குறிப்பாக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து காணாமல் போயுள்ளது. இதை தொடர்ந்து உடனே அந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்றது. அதேபோல் விமானம் கடைசியாக இருந்த இருப்பிடத்துக்கு அருகே உள்ள மரங்கள் காடுகளில் சுமார் 30 பேர் கொண்ட குழு இந்த தேடுதலில் ஈடுபட்டது.

விமானத்தின் பைலட்டை மீட்புக்குழுவினர் முதலில் அடையாளம் கண்டு காப்பாற்றியுள்ளனனர். அதன்பின்பு தொடர்ந்து அந்த தந்தை மற்றும் மகளை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில் சிறுமியின் ஐபேடில் இருந்து வந்த சிக்னலின் மூலம் அவர்களின் இருப்பிடத்தை மீட்புக்குழுவினர் கண்டறிந்தனர்.

அதேபோல் ஐந்து மணி நேர தேடுதலுக்கு பிறகு அமெரிக்க விமானப்படை விமான நிலையத்தில் இருந்து தென்கிழக்கேசுமார் 7 மைல் தொலைவில் அதிக மரங்கள் நிறைந்த பகுதியில் அவர்களை கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தந்தையும் மகளும் சிறிய காயங்களின் காரணமாக
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதேபோல் இது தொடர்பாக பெடரல் ஏவியேஷன் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு புதிய ஐபேட் ஆனது ஏ13 பிராசஸர் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்தபுதிய ஐபேட் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களை விட வேகமாக செயல்படக்கூடியது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல் புதிய ஐபேட் மாடல் சமீபத்திய ட்ரூடோன் அம்சத்தைக் கொண்டுவருகிறது. அதேபோல் இதன் செல்பீ கேமரா சென்டர் ஸ்டேஜ் அம்சத்தை கொண்டுள்ளதால் வீடியோகால் அழைப்புகளுக்கு மிகவும் அருமையாகவே இருக்கும் என்று கூறலாம். குறிப்பாக புதிய ஐபேட் மாடல் ஆனது 10.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும்இந்த புதிய ஐபேட் மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் புதிய ஐபேட் மாடலில் 12எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக