Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 19 நவம்பர், 2021

இவனும் ஒரு பேப்பர் தான்... ஆனால், மதிப்போடு இருப்பான்.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 -------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!! 
 -------------------------------------------
ராமு : டே நாளைக்கு நான் சினிமாவுக்கு போறேன் வரியாடா?
சோமு : முடிஞ்ச வரேன்டா... 
ராமு : முடிஞ்ச பிறகு ஏன்டா வர? படம் ஆரம்பிக்கும்போதே வரக்கூடாதா?
சோமு : 😐😐
 -------------------------------------------
பார்த்திபன் : பழம் எவ்வளவு?
வடிவேலு : ஒன்று 3 ரூபாய்.. 
பார்த்திபன் : 2 ரூபாய்க்கு வராதா?
வடிவேலு : 2 ரூபாய்க்கு தோல்தான் வரும்.
பார்த்திபன் : இந்தா 1 ரூபாய் தோல வெச்சுகிட்டு பழத்த கொடு...
வடிவேலு : 😖😖
 -------------------------------------------
பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல்...!!
 -------------------------------------------
☀ அதிகாரி - அலுவலர் 

☀ செக் - காசோலை

☀ சக்சஸ் - வெற்றி

☀ பீரோ - இழுப்பறை

☀ லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம் 
 -------------------------------------------
இப்படி இருங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்...!! 
 -------------------------------------------
கணவன் 👨 சொல்வதை மனைவி 👩 கேட்பதும்...

மனைவி 👩 சொல்வதை கணவன் 👨 கேட்பதும்... 

எதிர்ப்பின்றி வாழ்வதும் போலியான உறவே👫... 

கோபம் வந்தால் 😡 சண்டை போட்டு சமாதானம் 💑 ஆவதே இல்லறம்...

ஆகவே கோபம்😡 மகிழ்ச்சி😍 அழுகை😰 மனஅழுத்தம்😫 போன்றவற்றை ஒருவருக்கொருவர் மறைக்க வேண்டாம் 💁...

அவ்வப்போது வெளிப்படையாக இருங்கள் மகிழ்ச்சி💏 அதிகரிக்கும்💃...
  -------------------------------------------
விடுகதைகள்...!!
 -------------------------------------------

1. இவனும் ஒரு பேப்பர் தான்... ஆனால், மதிப்போடு இருப்பான்... அது என்ன? 

💵 பணம் 

2. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு... அவர் யார்? 

🐝 கொசு 

3. கன்று நிற்க கயிறு மேயுது... அது என்ன? 

🍑 பூசணிக்கொடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக