
இந்த கோயில் எங்கு உள்ளது?
காயத்ரி தேவிக்கான கோயில்கள் மிக அபூர்வமாகவே உள்ளன. அந்த வகையில் காயத்ரி தேவிக்கு கோவை வேடபட்டியில் ஓர் அழகிய ஆலயம் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடபட்டிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
ஆலயத்தில் பிரதானமாக கொலுவீற்றிருக்கும் காயத்ரி அம்மன், ஐந்து முகங்களுடன் பத்துக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம், தாமரை, கசை, ஏடு என ஏந்தி வெண்தாமரை மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.
ஐந்து முகங்களும் ஐந்து நிறங்களைக் கொண்டவை. அவை ஞானம், மனதைக் கட்டுப்படுத்துதல், உயர்ந்த குணங்கள், ஐஸ்வர்யம் தரக்கூடிய வல்லமை, உயர்ந்த ஆன்மிக ஞானம் என ஐந்து பண்புகளைக் குறிப்பவை என்பர்.
வேறென்ன சிறப்பு?
காயத்ரி சன்னதியின் இடதுபுறம் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார். நரசிம்மரின் ஒருபுறம் கருடாழ்வாரும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது அரிதான ஒன்றாகும்.
ரம்ய கணபதி, ஆஞ்சநேயர், கல்யாண முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகிரகம் என எழிலுடன் அமைந்துள்ள சன்னதிகள் கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் சனி மற்றும் ஞாயிறு அன்று ராதா மாதவ திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கணபதி, துர்க்கை, தன்வந்திரி, மிருத்யுஞ்சய, ஆஞ்சநேயர் நரசிம்மர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, நவகிரக குபேர, காயத்ரி ஹோமங்களுடன் சிறப்பு வழிபாடுகளும் நடந்து வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம், நரசிம்ம ஜெயந்தி, அனுமத் ஜெயந்தி, நவராத்திரி, பிரதிஷ்டாதினம் என அனைத்து விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனை செய்யலாம்?
பக்தர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், ஐஸ்வர்யம் பெருகவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக