Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 16 நவம்பர், 2021

பெண் செய்த உதவி.. என்னவாக இருக்கும்? படித்து பாருங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------
இன்றைய ஜோக்ஸ்....!!
---------------------------------------------

பெண் : நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்களோட துக்கம், பிரச்சனை எல்லாத்திலும் நானும் சம பங்கு எடுப்பேன்.
ஆண் : எனக்கு துக்கம், பிரச்சனை எதுவுமே இல்லையே.
பெண் : அவசர‌ப்படாதீங்க, நாமதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையே...
ஆண் : 😧😧
---------------------------------------------
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரை காப்பாத்தியிருக்கலாம்.
கமல் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்கு கிளம்பி போயிருப்பாரு.
கமல் : 😰😰
---------------------------------------------
சிந்தனை துளிகள்....! 
---------------------------------------------
பத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் அரைகுறையாக செய்வதை தவிர்த்து, ஒரே வேலையை முழுமனதோடும், கருத்தோடும் செய்யலாம்.
 
உன் முயற்சியின் மீது நீ கொண்ட நம்பிக்கை மட்டுமே... பின்னாளில் உன் திறமைகளை அங்கீகரிக்கவும், உன் வெற்றிகளை கௌரவிக்கவும் போகிறது.

பழம்பெரும் ஞானிகள், ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்தாலும் கூட, உன் வாழ்க்கையில் நீ கண்ட அனுபவங்களே உன்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.
---------------------------------------------
மகிழ்ச்சிக்கான மந்திரங்கள்..!
---------------------------------------------
🌻 சாந்தமாக பேசுங்கள்...

🌻 சுவையாக சாப்பிடுங்கள்...

🌻 போதுமான நேரம் உறங்குங்கள்...

🌻 பொறுமையாக பணி செய்யுங்கள்...

🌻 உண்மையாக இருங்கள்..

🌻 எதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்...

🌻 சரியாக திட்டமிடுங்கள்...

🌻 நேர்மையாக சம்பாதியுங்கள்...

🌻 தொடர்ந்து சேமியுங்கள்...

🌻 நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்...

🌻 எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துங்கள்...
---------------------------------------------
என்னவாக இருக்கும்? படித்து பாருங்க...!!
---------------------------------------------
ஒரு ஆண் கொட்டும் மழையில்☔ நனைந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்🚶 அதை பார்த்த அழகான ஒரு பெண்👰 'நீங்க என்னோட குடைக்குள்ள☔ வந்தாலென்ன?" என்று கூறினாள்.

அதற்கு ஆண்👨 வேண்டாம். நன்றி சகோதரி🙏 அப்படினு சொல்லிட்டு அவன் நடந்து🚶 போயிட்டான் !!!

கருத்து :

கருத்தும் குருத்தும் ஒண்ணுமில்ல💁... அவனுக்குப் பின்னால் அவனோட மனைவி வந்துகிட்டிருந்தா...!!😀😇

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!