Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 16 நவம்பர், 2021

Cheap and Best: அதிரடி அம்சங்கள், அடக்கமான விலை கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

The Best Smartphones of 2021 - New Smartphone Reviews

இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது. அம்சங்கள் அதிகமாக இருந்தால் விலையும் அதிகமாக உள்ளது. விலை குறைவான ஸ்மார்ட்போன்களின் தரம் சரியாக இருப்பதில்லை. 

சிறந்த கேமரா முதல் வலுவான பேட்டரி வரை உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரெட்மி நோட் 10டி

128ஜிபி உள் சேமிப்புடன், இந்த ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன் 5,000எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி பிரதான சென்சார் கேமராக்கள் மற்றும் 6.5 இன்ச் முழு எச்டி+ திரையுடன் வருகிறது. அமேசானில் இந்த ரெட்மி போனை ரூ.16,999க்கு வாங்கலாம்.

ரியல்மி நார்சோ 30

இந்த Realme ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் முக்கிய சென்சார் 48MP கொண்டது. வலுவான 5,000mAh பேட்டரி மற்றும் 30W சார்ஜருடன், இந்த ஃபோன் 64GB உள் சேமிப்புடன் வருகிறது. பிளிப்கார்டில் இதை ரூ. 14,499க்கு வாங்கலாம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

இந்த Poco 5G ஸ்மார்ட்போன் 8MP முன்பக்க கேமரா, 48MP பிரதான சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு, 5,000mAh பேட்டரி மற்றும் 128GB சேமிப்பகத்துடன் வருகிறது. பிளிப்கார்டில் இதை 16,499 ரூபாய்க்கு வாங்கலாம்.

ஓப்போ ஏ74 5ஜி

வலுவான 5,000mAh பேட்டரி மற்றும் 48MP பிரைமரி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போனை Amazon இல் வாங்கலாம். இதன் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.17,990 ஆகும்.

ரியல்மி 8 5 ஜி

ரியல்மியின் (Realme) இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே, 16எம்பி செல்ஃபி கேமரா, 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி போன்ற வசதிகள் உள்ளன. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,499-க்கு வாங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!