ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து விரைவில் பட்ஜெட் விலையில் புதிய ஜியோபுக் எனும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஜியோபுக் மாடல் ஆனது எண்ட்ரி-லெவல் அம்சங்களை கொண்டிருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் சமீபத்தில் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதன்படி இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் ஆனது என்.பி.112எம்.எம். எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் மாடல் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மேலும் இந்த ஜியோபுக் லேப்டாப் மாடலில் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் மாடல் வெளிவரும்.
குறிப்பாக மினி எச்.டி.எம்.ஐ போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், குவால்காம் ஆடியோ சிப், JioStore, JioMeet, JioPagesஆப்ஸ் மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் மைக்ரோசாப்ஃப்ட் ஆபிஸ் போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஜியோபுக் லேப்டாப் மாடல். இந்த ஜியோபுக் லேப்டாப் மாடலில் ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ், 4ஜி எல்.டி.இ. போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக