Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

Wrok From Home மூலம் வருமானம் அதிகம்.. எப்படி தெரியுமா..?

 நிறுவனங்களின் பதில்

கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு இந்தியா முழுவதும் ரிமோட் வொர்க் மற்றும் ஹைப்ரிட் வொர்க் கலாச்சாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் நிரந்தரமாக இந்தக் கலாச்சாரத்தைப் பயன்படுத்த முடிவு செய்து. இந்நிலையில் ரிமோட் வொர்க் மற்றும் ஹைப்ரிட் வொர்க் கலாச்சாரம் குறித்து முக்கியமான ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது.

ரிமோட் வொர்க் - ஹைப்ரிட் மாடல்

இன்டீட் நிறுவனம் செய்த ஆய்வில் கொரோனா தொற்றுக்குப் பின்பு 60 சதவீத ஊழியர்கள் ரிமோட் வொர்க் அதாவது நிரந்தரமாக வீட்டில் இருந்தோ அல்லது சொந்த ஊரில் இருந்தோ பணியாற்றும் முறையை ஆதரிக்கின்றனர். இதேபோல் 42 சதவீத ஊழியர்கள் ஹைப்ரிட் மாடல் அதாவது பாதி நாள் வீட்டில், பாதி நாள் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற விரும்புகின்றனர் எனத் தெரிகிறது.

நிறுவனங்களின் பதில்

இந்த ஆய்வை இன்டீட் நிறுவனம் நிறுவனங்கள் மத்தியிலும் செய்துள்ளது. ஊழியர்களைப் போலவே நிறுவனங்களும் கிட்டதட்ட ஓரே மாதிரியான பதிலைத் தான் அளித்துள்ளனர். 64 சதவீத நிறுவனங்கள் ரிமோட் வொர்க் கலாச்சாரத்தையும் 45 சதவீத ஹைப்ரிட் மாடல் தான் ஆதரித்து உள்ளனர். இதுதான் கொரோனா தொற்றுக்குப் பின் இருக்கும் டரெண்ட் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆட்டோமேஷன் பணிகள்

இந்த மாற்றத்தின் வாயிலாக இந்திய நிறுவனத்தில் டிஜிட்டைசேஷன் அல்லது ஆட்டோமேஷன் பணிகள் அதிகரித்துள்ளது என்றும், கிக் வொர்க் மற்றும் ப்ரீலான்சர் வேலைகள் அதிகரித்துள்ளது என்று ஊழியர்களும், நிறுவனங்களும் தெரிவித்துள்ளது. இந்த டிஜிட்டைசேஷன் அல்லது ஆட்டோமேஷன் பணிகள் ஒருபக்கம் வேலை சுமையைக் குறைத்தாலும் மறுபுறம் வேலைவாய்ப்பு எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

ப்ரீலான்சர்

வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால், வேலை செய்யும் நிறுவனத்தில் தெரியாமல் பிற நிறுவனங்களில் ப்ரீலான்சராக அல்லது பகுதி நேர ஊழியராகப் பணியாற்றி வருகின்றனர். இதனால் கூடுதலான வருமானத்தைப் பெற்று வருகின்றனர்.

எக்ஸ்ட்ரா பெனிபிட்ஸ்

இந்த ஆய்வில் பங்குபெற்ற ஊழியர்களில் 58 சதவீதம் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் போது ஆகும் செலவுகளை நிறுவனங்கள் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். அதாவது இண்டர்நெட், டெஸ்க், ஸ்டேஷ்னரி பொருட்கள், இன்னும் பலவற்றுக்கு நிறுவனங்கள் பணம் செலுத்துகிறது.

செலவுகள் குறைப்பு, சேமிப்பு அதிகரிப்பு

இதோடு வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் பல செலவுகளைக் குறைத்து ஊழியர்கள் கூடுதலான பணத்தைச் சேமித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாகப் போக்குவரத்துச் செலவுகள், வெளியில் சாப்பிடும் உணவுக்கான செலவுகளும் குறைந்துள்ளது என நிறுவனங்கள் கூறுகிறது. இதுமட்டும் அல்லாமல் பலர் தங்களது சொந்த ஊரில் இருந்து பணியாற்றும் காரணத்தால் வாடகை பிரச்சனையும் இல்லை.

நிறுவனங்களுக்கு லாபம்

மேலே கூறிய அனைத்தும் ஊழியர்களுக்கு லாபகரமான விஷயமாக இருக்கும் நிலையில், நிறுவனங்கள் கொரோனா தொற்றுத் துவங்கிய காலத்தில் பல அலுவலகங்களை மூடி பெரிய செலவுகளைக் குறைத்தது. இதனால் ஊழியர்களுக்கு ரிமோட் வொர்க் அல்லது ஹைப்ரிட் வொர்க் அளிப்பதில் ஆதரவு அளித்து வருகிறது.

வேலை சுமை திணிப்பு

வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குச் சில நிறுவனங்கள் மட்டுமே reimburse செய்யும் நிலையில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எதுவும் அளிப்பது இல்லை. இதேபோல் வீட்டில் இருந்து பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கூடுதலாகப் பணி அளிக்கப்பட்டு, அதிகப்படியான நேரம் பணியாற்ற நிறுவனம் முற்படுகிறது. இது நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான லாபம்.

நிறுவனங்களுக்கு இரட்டிப்பு லாபம்

ஒருபக்கம் ஊழியர்களுக்கு அதிக வேலைச் சுமை கொடுத்து அதிகப்படியான வருமானத்தைப் பெற்று வரும் நிறுவனங்கள், அலுவலக வாடகை முதல், அலுவலகத்தில் இருக்கும் பல செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், இண்டர்நெட், மின்சாரம் என அனைத்தும் குறைக்கிறது. இது நிறுவனங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக