இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான டெல்டாக்ரான் பரவல் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா-டெல்லி உட்பட 7 மாநிலங்களில் 568 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக, நோவோவேக்ஸ் (Novavax) கோவிட்-19 தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 12-18 வயதுடைய குழந்தைகளுக்கான COVID-19 தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக Novavax அறிவித்துள்ளது.
சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி
நோவோவேக்ஸ் தடுப்பூசி NVX-CoV2373 என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, கோவோவாக்ஸ் என்ற பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த வயதினருக்குப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட புரத அடிப்படையிலான முதல் தடுப்பூசி இதுவாகும்.
அவசரகால பயன்பாட்டிற்கு DCGIஒப்புதல்
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்க, Covovax தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமதித்துள்ளது.
DCGI டிசம்பர் 28 அன்று 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு 'கோவோவக்ஸ்' அவசரகாலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது. முன்னதாக டிசம்பரில், உலக சுகாதார அமைப்பு (WHO) Covovax இன் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
முதல் தடுப்பூசி அனுமதியைப் பெற்றதில் பெருமிதம்: நோவாவாக்ஸ்
நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டான்லி சி எர்க் கூறுகையில், 'குழந்தைகளுக்கான இந்த தடுப்பூசிக்கு முதன் முதலாக அனுமதி கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறோம். இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு இந்தியாவில் உள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மாற்று புரத அடிப்படையிலான தடுப்பூசி பாதுகாப்பை வழங்கும் என்று எங்கள் தரவு தெரிவிக்கிறது.
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனவல்லா கூறுகையில், “இந்தியாவில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் அனுமதி இந்தியா மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நமது நோய்த்தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
புரோட்டீன் அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பூசியை நமது நாட்டின் இளம் பருவத்தினருக்குச் தொற்றுக்கு எதிரான பாதுகாப்புத் தன்மையுடன் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் என அவர் மேலும் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக