>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 23 மார்ச், 2022

    இதில் யார் முட்டாள்? இன்றைய தத்துவம்... படிங்க... சிரிங்க... -

    ------------------------------------------
    கலக்கலான காமெடிகள்...!!
    ------------------------------------------
    பக்தன் : நான் இந்த கோவிலுக்கு நாலு வருஷமா வந்துகிட்டிருக்கேன்..
    பூசாரி : உங்க வீடு என்ன அவ்வளோ... தூரமா இருக்கு?
    பக்தன் : 😟😟
    ------------------------------------------
    கடவுள் : பக்தா.. என்ன வரம் வேண்டும் கேள்?
    பக்தன் : நான் சாப்பிடும் போதெல்லாம் கரண்ட் போயிடணும்.
    கடவுள் : ஏன்?
    பக்தன் : நான் சாப்பாடு கேட்டா.. என் மனைவி சீரியல் முடியட்டும்னு சொல்றா..
    கடவுள் : 😂😂
    ------------------------------------------
    இன்றைய தத்துவம்...!!
    ------------------------------------------
    தனிமைகள் கிடைப்பது உன்னை நீ தெரிந்துக் கொள்ள..

    தவறுகள் நடப்பது உன்னை நீ திருத்திக் கொள்ள..

    முயற்சிகள் எடுப்பது உன்னை நீ முன்னேற்றிக் கொள்ள..

    எதிரிகள் கிடைப்பது உன்னை நீ வளர்த்துக் கொள்ள..!!
    ------------------------------------------
    இதில் யார் முட்டாள்?
    ------------------------------------------
    ஒருவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது.

    தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

    திடீரென்று ஒரு யோசனை வந்தது. அருகில் உட்கார்ந்திருந்தவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார்.

    அருகே இருந்தவர் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார்.

    அவரும் நன்கு தூங்க தொடங்கினார். அவரை எழுப்பி விடுவதாக சொன்ன நபருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்கு, இருபது ரூபாய் வாங்குவது கஷ்டமாக இருந்தது.

    தான் வாங்கிய பணத்துக்கு உபயோகமாக வேறு ஏதாவது அவருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார்.

    தான் ஒரு முடி திருத்துபவர் என்பதால், அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டார்.

    அந்த நபர் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார். இதை எதையும் அறியாத அவரோ நேராக வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

    தன் மனைவியை அழைத்து சொன்னார், 'ரயிலில் அந்த முட்டாள் என்னை எழுப்பி விடுவதற்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்றார்.
    ------------------------------------------
    இன்றைய கடி...!!
    ------------------------------------------
    ரயிலை கண்டுபிடிக்கலைன்னா என்னாயிருக்கும்?
    .
    .
    .
    .
    .
    தண்டவாளம் வீணா ஆகியிருக்கும்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக