Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சூரிய பகவான் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் !!


 Image result for சூரிய பகவான் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் !!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




ஆயிரம் கரங்கள் மறைத்தாலும், ஆதவன் ஒளி மறைவது இல்லை என்ற வரிகளுக்கு உரிய நவகிரகங்களின் தலைமை கிரகமான சூரிய பகவானின் பண்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

சூரிய பகவானின் பண்புகள் :

 ஒளியை கொண்டவர்.

 பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களின் உற்பத்திக்கு காரணமானவர்.

 ஆரஞ்சு வண்ணத்தை சொந்தம் கொண்டவர்.

 தன்னுடன் இணையும் அனைத்து கிரகங்களையும் அஸ்தமனம் செய்

சூரிய பகவான் வரலாறு :

 பிரம்மதேவன் படைத்தல் தொழிலை மேற்கொண்டார். அப்போது படைத்தல் தொழிலுக்கு உதவியாக ஏழு சப்த ரிஷிகளைப் படைத்தார். அந்த சப்த ரிஷிகளில் ஒருவர் மரீசியும் ஆவார். மரீசியின் மகன் கசியபர் ஆவார்.

 கசியபர் பல வேதங்களையும், உபநிடங்களும் கற்று பண்டித்துவம் பெற்று விளங்கினார். இவர் தட்சப் பிரஜாபதியின் பெண்களில் 13 பெண்களை மணந்து, இந்த பூவுலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையான அனைத்து உயிர்களையும் படைத்தார்.

 கசியவருக்கும் கற்புக்கரசியான அதிதிக்கும் பிறந்த குழந்தை தான் சூரியன். இந்த உலகினை ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவரும் இவரே. நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படும் கிரகம் சூரிய பகவானே, காரணம் அனைத்து கிரகங்களையும் ஆளுமை செய்யும் தன்மை இந்த சூரியனுக்கே உண்டு.

 மேலும், மற்ற கிரகங்களை வக்கரகம் செய்யும் சக்தியும், அஸ்தமனம் பெற செய்யும் சக்தியும், சூரிய பகவானுக்கு உள்ள சிறப்பு அம்சங்களாகும். சூரியன் சமுக்ஞை(உஷாதேவி), பிரபை, ரைவத இளவரசி ஆகிய மூன்று மனைவிகளை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களில் சமுக்ஞையிடம் அதிக பிரியம் கொண்டு இருந்தார். முதல் மனைவியான சமுக்ஞை பட்டத்து ராணியாக திகழ்ந்தார்.

 சூரியனுக்கும், சமுக்ஞைக்கும் வைவ சுதமனு, எமன் ஆகிய 2 மகன்களும், யமுனை என்னும் மகளும் பிறந்தனர். சூரியனிடம் வெப்பத்தை குறைத்துக் கொள்ளும்படி பலமுறை சமுக்ஞை சொல்லியும் சூரியன் குறைத்துக் கொள்ளவில்லை.

 ஒரு நிலையில் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேற எண்ணிணார் சமுக்ஞை. தான் இல்லாத இடத்தைப் பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய நிழலைக் கொண்டு தன்னைப் போன்ற ஒரு பெண்ணை படைத்தார். அந்த பெண்மணியே சாயாதேவி ஆவார்.

 சமுக்ஞை, சாயாதேவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு தன் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார். ஆரம்பத்தில் எந்த ஒரு வித்தியாசமும் இன்றி சூரியனிடமும், சமுக்ஞையின் பிள்ளைகளிடம் உண்மையான மனைவி மற்றும் தாயாக நடந்துக் கொண்டாள்.

 நாளடைவில் சூரியனுக்கும், சாயாதேவிக்கும் சாவர்ணி, சனி என்ற பிள்ளைகளும், தபதி, விஷ்டி என்ற பெண்களும் பிறந்தனர். தன் பிள்ளைகளிடம் அதிக அன்பை காட்டிய சாயாதேவி, சமுக்ஞையின் பிள்ளைகளிடம் மாற்றான் தாய் போல் நடந்து கொள்கிறார்.

இங்கு நடந்த எல்லாவற்றையும் எமன் அறிந்திருந்தாலும் சாயா தேவியிடம் எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருந்தார். ஒரு சூழ்நிலையில் சாயா தேவிக்கும் யமனுக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

 வாக்கு வாதத்தின் போது எமன் சாயாதேவியை கீழே தள்ளி உதைத்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த சனி எமனிடம் இதை கேட்க, எமன் தன்னிடம் இருந்த கஜாயுதத்தால் சனியின் கால்களை அடித்தார். இதைக் கண்ட சாயாதேவி தன் மகனை அடித்த மற்றும் தன்னை உதைத்த எமனின் கால்கள் அழுகிப் போகட்டும் என சாபமிட்டாள்.

 சாயாதேவியின் சாபத்திற்கு ஏற்ப எமனின் கால்கள் அழுகத் தொடங்கின. அழுகிய காலுடன் எமன் சூரியனை காண சென்றார். சூரியனும் எமனின் நிலையை கண்டு நடந்தது என்ன எனக் கேட்டார். எமன் அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சூரியனிடம் கூறினார்.

 எனவே, சூரியன், சாயாதேவியை வெறுத்துவிட்டு சமுக்ஞையைத் தேடி சென்றார். அப்போது சமுக்ஞை சூரியனிடம், ஒரு நிபந்தனையை விதித்தார். சூரியனும் அந்த நிபந்தனையை ஏற்று தனது வெப்பத்தை குறைத்துக் கொள்கிறார்.

 (சூரியனுடைய அதிகப்படியான வெப்ப சக்தியை வெளியேற்றி சூலாயுதம் மற்றும் சக்ராயுதத்தை உருவாக்கி அதை சிவபெருமானும், விஷ்ணுவும் எடுத்துக் கொண்டனர்.) சாபம் பெற்ற எமனிடம், சிவபெருமானை நோக்கித் தவமிருக்க ஆலோசனைச் சொன்னார் சூரியன். எமனும் சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டு சிவபெருமானின் தரிசனத்தையும், ஆசியையும் பெற்று எமதர்மராகி உயிர்களுக்கு ஏற்படும் மரண காலத்தைக் கணக்கிட்டு கடமையாற்றினார்.

 அதன்பின் சூரியனும், சமுக்ஞையும் இணைந்தனர். அதன் பயனாக குதிரை வடிவம் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த இரண்டு குழந்தைகளுக்கு அஸ்வினி தேவர்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.

 நட்சத்திர தொகுப்பில் அஸ்வினி தேவர்களே முதன்மையானவர்கள். சனி பகவானும் நவக்கிரக அந்தஸ்து பெற்று நவகிரகங்களில் ஒருவரானார். சூரியனுடைய அனைத்து புத்திரர்களுமே உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.

 எனவே, ஒருவர் ஜாதகத்தில் சூரியன் அமையும் நிலையைப் பொருத்தே களத்திர தோஷம், புத்திர தோஷம், உத்தியோக பிரபந்த தோஷம், வித்யா பிரபந்த தோஷம் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

சூரிய பகவானும், அவர் தரும் தோஷமும் :

 ஒருவருடைய லக்னத்தில் சூரியன் நின்றால், அவர் முன் கோபம் கொண்டவராய் இருப்பார்.

 லக்னத்திற்கு 5-ல் சூரியன் நின்றால், தனது சுகத்தை தானே கெடுத்து கொள்வார் மற்றும் புத்திர பாக்கியம் குறைவு.

 லக்னத்திற்கு 7-ல் சூரியன் நின்றால் காலதாமதமான திருமணம் அமையும்.

சூரிய காயத்ரி மந்திரம் :

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

சூரிய பகவானுக்கான பரிகாரம் :

 ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றும், ஜாதகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நின்று தோஷம் தருமாயின், ஆடுதுறை சூரியனார் கோவில் சென்று மனதார சூரியனை வணங்கி பரிகாரம் செய்ய வேண்டும்.

இக்கோவில் சூரிய பகவானுக்கு பரிகாரம் செய்ய முதன்மையான கோவிலாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக