
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அகஸ்தியர்
அருவி என்பது திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஒரு அழகான அருவி ஆகும். சுமார் 25 அடி உயரத்தில்
இருந்து விழும் இந்த அருவி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில்
ஒன்றாக இருக்கிறது.
திருநெல்வேலியிலிருந்து ஏறத்தாழ 59கி.மீ
தொலைவிலும், பாபநாசத்திலிருந்து 3கி.மீ தொலைவிலும் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி
அமைந்துள்ளது.
மலைகள் சூழ்ந்திருக்க ஒரு அருமையான இயற்கைச்
சூழலில் அமைந்துள்ள இந்த அருவி சிறியதாக இருந்தாலும், குற்றாலத்தைப் போல இந்த
அருவியில் விழும் தண்ணீரும் உடல் நலத்திற்கு வலிமை சேர்ப்பதாகும்.
இதனை
குடும்ப அருவி என்று கூட அழைக்கின்றனர். அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர் இதமாக
விழுவதால், சிறுவர்களைக் கூட அழைத்துச் சென்று ஆனந்தமாகக் குளிக்கலாம்.
இந்த அருவியின் ஒரு பகுதி நீர் வந்து நிரம்பும்
குளம் ஒன்று அருகில் உள்ளது. இதில் மிகவும் வளர்ந்த மீன்கள் நீந்தி விளையாடுவதை
பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
மாலையில் சென்று பொழுதைக் கழிக்க ஏற்ற இடமிது.
அருவியில் சுகமாக நீராட விரும்புவோர் அதிகாலை நேரத்தில் இங்கு சென்று நீராடலாம்.
இந்த அருவிக்குக் காரையார் மற்றும் சேர்வலாறு
நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர்
வருவதால், இந்த அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே
இருக்கிறது.
களக்காடு
முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகிலுள்ளதால் அருவியிலிருந்து பாபநாசம் செல்லும்
வழியில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்தப்
பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் அருவி நீரில் சரும வியாதிகளை
போக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் வெயில் காலம் வந்துவிட்டால்
அகஸ்தியர் அருவியில் கூட்டம் அலைமோதும்.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எப்படி செல்வது?
திருநெல்வேலிக்கு
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து
அகஸ்தியர் அருவிக்கு பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்களின் மூலமும் செல்லாம்.
எங்கு தங்குவது?
அம்பாசமுத்திரம்
மற்றும் பாபநாசம் நகரில் தங்கும் விடுதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக