இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு
இருக்கும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக
இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு
பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம்
ஆகும்.
புரட்டாசியில் கடைபிடிக்க வேண்டிய சில
விரதங்கள் :
சித்தி விநாயக விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில்
விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை
வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.
சஷ்டி-லலிதா விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை
நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால்
பரமேஸ்வரி சர்வமங்களங்களையும் அருள்வாள்.
அனந்த விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று
கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத
வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.
அமுக்தாபரண விரதம் :
புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமாமகேஸ்வரரின்
அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும்.
சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும்
விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும்
வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.
மகாலட்சுமி விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு
நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஓவ்வொரு நாளும்
பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம்
பெறும்.
கபிலா சஷ்டி விரதம் :
புரட்டாசி
மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை
ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக