Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கடவுள் எங்கே இருக்கிறார்...?

Image result for கடவுள் எங்கே இருக்கிறார்...?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் இளங்கோவனும் ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும் புத்திசாலியாக இருந்ததால் குருவுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. அதனால், தனக்கு தெரிந்த அனைத்தையும் இளங்கோவனுக்கு குரு கற்றுக் கொடுத்தார். குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற இளங்கோவனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.

ஒரு நாள் குரு அவனை அழைத்து, மகனே நீ கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டுவிட்டாய். இனிமேல் குருகுலவாசம் உனக்கு போதும். நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத் தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத் துணை இருப்பார் என்று வாழ்த்தினார்.

தனது குருவை வணங்கிய இளங்கோவன் அவரிடம் பணிவாக, குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப் பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும் எனக்குக் காட்டவில்லையே! கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத் துணை இருப்பார்? என்று வினவினான்.

உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள காட்டின் வழியே சென்றால் ஒரு நகரம் வரும். அங்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து அவரை நலம் விசாரித்து வா? என்றார். இளங்கோவனும் மறுநாள் காலை கிளம்பினான். அப்போது அவனுக்கு மிகவும் தாகமாக இருந்தது. அப்போது அவன் கண்களில் ஒரு வயதான பார்வையற்ற ஒருவர் தென்பட்டார். அவர் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப் பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்கொண்டார்.

அதைப் பார்த்த அவன் ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்? என்று கேட்டான். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு வழங்குகிறேன். இது பாம்புக் கடிக்கான மூலிகை. இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில் விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில் சுற்றுகிறாய். இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள், என்று சில இலைகளைக் கொடுத்தார். பிறகு குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டான்.

அருகில் ஒரு கிணறு உள்ளது! என்று கிணறு இருக்கும் இடத்தைக் காட்டினார். அந்தக் கிணற்றை அடைந்து தாகம் தீர தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான். அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக் கண் விழித்த பார்த்த போது கண்களில் ஒரு முயல் தென்பட்டது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர் தப்பினான்.

அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த இளங்கோவன் இருட்டும் நேரத்தில் நகரை அடைந்தான். அன்று இரவு ஒரு சத்திரத்தில் தங்கினான். நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த இளங்கோ தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவர் வாயில் நுரைதள்ளியதை பார்த்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை கண்டதும் உடனே இளங்கோ தன்னிடமிருந்த விஷக்கடி மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அவர் வாயில்விட்டதும் அவர் உயிர் பிழைத்தார்.

மறுநாள் காலை குருவின் சகோதரரை சந்தித்து விசாரித்து விட்டு, பிறகு தன் குருவிடம் திரும்பினான். தான் சென்று வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும் விளக்கிக் கூறினான். இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான் ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது. கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்? பார்க்கவில்லையே! என்றான். மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான மூலிகை தந்தாரோ, அவர் கடவுள். காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி, யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும் கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான். யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ, அவருக்கு நீ கடவுள். இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார். குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று. பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக