இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கல் மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
தமிழ் குடி என்பார்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழ் சமூகம் உலகின் முதல்
எழுத்தறிவு பெற்ற சமூகமாகவும் இருக்கின்றது. தற்போது கீழடியில் கிடைத்துள்ள
ஆதாரங்களின் அடிப்படையில், தேன் மதுர தமிழோசை தெருவெல்லாம் முழங்கிட
வழிசெய்துள்ளது இந்த தொழில்நுட்பம் தான்.
·
தமிழன் யார் ?
தமிழன் யார் என்ற கேள்விக்கு தற்போது பல்வேறு பதில்கள்
கிடைத்துக் கொண்டிருகின்றன. அவனின் நாகரீக வளர்ச்சி உள்ளிட்டவை பண்டயை கால
தொல்காப்பியம்,அகநானூறு, புறநானூறு உள்ளிட்டவைகளின் வாயில நாம் அறிந்து
இருக்கலாம். தமிழன் இப்படி எல்லாம் வாழ்ந்தானா என்று தமிழன் இனத்தால் கூட கற்பனை
செய்து பார்க்க முடியாத விடயங்கள் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறன.
·
ஆமைகள், யானைகள் அடையாளம்
தமிழ் இனத்திற்கு நீர் வழியாக அடையாளமாக ஆமைகளையும், நில
வழி அடையாளமாக யானைகளையும் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் சென்று திடை கடல்
ஓடியும் திரவியம் சேர்த்துள்ளதான் என்பது தான் உண்மை. கடலில் நீரோட்டத்தின் வழியே
செல்லும் ஆமைகளையும், காடுகளில் வழியாக செல்லும் யானைகளையும் தமிழன் அடையளாமாக
வைத்து பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்தான் என்று ஆய்வாளர்கள் ஒடிசா பாலும்,
மலேசிய வாழ் அறிஞர் கண்ணணும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் உலகில் மிகவும் பழமை வாய்ந்தது கலாச்சாரத்தை
உடையவர்கள் தமிழர்கள். கப்பல் கட்டுமானம், பல்வேறு வகையான எண்ணெய் வித்துக்கள்,
முத்துக்கள், ரத்தினங்களையும் மொழி அறிவையும் சீனா, எத்தியோப்பியா, ஆப்ரிக்கா,
ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளனர் என
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
·
கீழடி ஆய்வு
மதுரை-சிவகங்கைக்கும் அருகே உள்ளது கீழடி அகழாய்வில்
கிடைத்த முடிவுகள் கடந்த வாரம் வெளியாகி பெரும் தமிழ் குடி மற்றும் ஒட்டு மொத்த
உலகையே ஆச்சரிப்படுத்தியுள்ளது. என்னவென்று கேட்டால், கி.மு 6ம் நூற்றாண்டிலேயே
தமிழ் இனம் நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் என கிடைத்த சான்றுகளை
வைத்து ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
·
புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக கண்டுபிடிப்பு
4ம் கட்ட ஆய்வுக்கு பிறகு தற்போது, 5ம் கட்ட
அகழாய்வுகளையும் மாநில தொல்லியல் துறை புதிய தொழில்நுட்பங்களையும்
பயன்படுத்தியுள்ளது. கீழடி கிராமத்தை சுற்றி சுமார் 15 சதுர கிமீ பரப்புக்கு
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆங்காங்கே பரவிக்கிடக்கின்றன. எந்த இடத்தில்
ஆய்வு செய்ய வேண்டும் என்பதை திட்டமிடவேண்டும். தரைக்கு மேல் நடத்தப்படும் ஆய்வின்
(survey) மூலமே இந்த இடங்கள் தீர்மானிக்கப்கின்றன.
·
சேட்லைட் படங்கள் முதல் ரேடார் வரை
இந்த ஆய்வுகள் துங்கும் முன் செயற்கைகோள் படங்கள்
எடுக்கப்பட்டது ஆய்வு செய்யப்பட்டன. பின் மேக்டோமீட்டர் (magnetometer) மற்றும்
தெர்மோ மேப்பிங் (thermomapping)லத்தை ஊடுவிச் செல்லும் ரேடார் (ground
penetrating radar - GPR) உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி ஆய்வு
செய்யப்பட்டது.
·
350 மீட்டர் நீளச்சுவர் கண்டுபிடிப்பு
மேக்னேடோ மீட்டர் வைத்து கீழடியில் பூமிக்கடியில்
புதைந்திருந்த 350 நீளச் சுவர் கண்டறியப்பட்டது. இதற்கு பிறகு நீலத்தடியை ஆராயும்
(ground penetrating radar - GPR) வைத்து, சரியான இடமும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருவதால், ஆய்வுகளையும் சிறப்பாக
செய்ய முடியும் என தொல்லியல் துறை நம்புகிறது.
·
மேக்னடோ மீட்டர்கள் பயன்கள்
புதைந்திருக்கும் சுவர், கட்டட அமைப்பு, பானைகள்,
செங்கல்கற்கள், கூரை ஓடுகள், தீமூட்டு இடங்கள், பாதைகள், நினைவுச் கற்கள்
ஆகியவற்றை கண்டறிய இம்மாதிரி மேக்னடோ மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
·
ஆழ்கடல் பகுதியில் ஆய்வு
தொல்லியல் மேடுகளில் ஆய்வுகளை மேற்கொள்வது தவிர ஆழ்கடல்
பகுதிகளில் ஆகழ்வாராய்ச்சியில் ஈடுபடவும் மாநில தொல்லியல் துறை முடிவு
செய்துள்ளது. ஏற்கனவே பூம்புர், கொற்கை, அழகன்குளம், வசசமுத்திரம் ஆகிய பகுதிகளில்
மாநில தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
·
கிரேக், ரோம், அரபு
கிரேக்கம், அரபு, ரோம் உள்ளிட்ட நாடுகளுடன் தமிழகத்திற்கு
இருந்த வணித் தொடர்புகளை ஆராயும் வகையில் சங்ககாலமும் இடைக்காலஙக்ளில்
துறைமுகங்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலத்
தொல்லியத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், கடல் தேசிய நிறுவனத்துடன் இணைந்து இந்த
ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக