புதிய ஆப் வசதிகள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக நமது தினசரி வேலைகளை மிகவும் சுலபமாக செய்து முடிக்கிறது ஒரு சில ஆப் வசதிகள். ஆனாலும் பிளே ஸ்டேரில் நீங்கள் ஆப் வசதியை பதிவிறக்கம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு சில ஆப் வசதிகள் நமது தகவல்களை திருடும்.
பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை (ஆப்) பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு அதன் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு சில செயலிகள் நமது தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர் வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. அதன்படி தற்போது hindustantimes வலைதளம் வெளியிட்ட தகவலின்படி, பிளே ஸ்டோரில் 10 செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடும் மால்வேரால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த மால்வேரால் பாதிக்கப்பட்ட செயலிகள் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது எனறும், பின்பு வங்கி சார்ந்த தகவல்களை திருடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆபத்தான அந்த 10 செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்துகூகுள் தடை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த ஆபத்தான செயலிகளை வைத்துள்ளனர். எனவே இவற்றை உடனே டெலிட் செய்வது மிகவும் நல்லது. இப்போது இந்த ஆபத்தான 10செயலிகளின் பட்டியலைப் பார்ப்போம்.
நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய தீங்கிழைக்கும் செயலிகள் இதோ
1. Speed Radar Camera
2. Al-Moazin Lite (Prayer times)
3. Wi-Fi Mouse (Remote Control PC)
4. QR & Barcode Scanner Developed by AppSource Hub
5. Qibla Compass - Ramadan 2022
6. Simple Weather & Clock Widget (Developed by Difer)
7. Handcent Next SMS- Text With MMS
8. Smart kit 360
9. Full Quran MP3-50 Languages & Translation Audio
10. Audiosdroid Audio Studio DAW
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 10 செயலிகளை இதுவரை 60 மல்லியனுக்கு அதிகமாக பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே இந்த
தீங்கிழைக்கும் செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக