பொதுவாகவே மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள் என்றாலே நார்ச்சத்து நிறைவாக இருக்கும். அது உடல் கொழுப்பைக் குறைத்து ஃபிட்டான உடலமைப்பிற்கு உதவும்.
பப்பாளி சாப்பிட வெயில் காலம்தான் சரியான தருணம் குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகளைப் பெறலாம். எப்படி தெரியுமா?
பொதுவாகவே மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள் என்றாலே நார்ச்சத்து நிறைவாக இருக்கும். அது உடல் கொழுப்பைக் குறைத்து ஃபிட்டான உடலமைப்பிற்கு உதவும். அந்த வகையில் பப்பாளி உங்களுக்கு சிறந்த பழம். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
ஒரு கப் பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரித்து, நச்சு நீக்கியாக செயல்படும். வயிறு எரிச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளும் இருக்காது.
வைட்டமின் A மற்றும் C இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பப்பாளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் நார்ச்சத்து இரத்த ஓட்டத்தையும் சீராக்கும். கொழுப்பையும் எளிதில் கரைக்கும். இதனால் இதய நோய்களும் வராது.
விட்டமின் E - யும் பப்பாளியில் இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக்கொண்டு பளபளப்பான முக அழகுக்கும் உதவுகிறது. எனவே இத்தனை நன்மைகள் அடங்கிய பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் தானே..?
கர்ப்பிணிகள் மட்டும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக