Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன? உங்களுக்கு தெரியுமா?

------------------------------------------
கடி ஜோக்ஸ்!!
------------------------------------------
ராஜீ : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்-ன்னு நினைக்கிறேன். 
மோகன் : எப்படிச் சொல்ற? 
ராஜீ : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு.
மோகன் : 😅😅
----------------------------------------
கணவன் : ச்சீ! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி. 
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வெச்சுருக்கேன். 
கணவன் : 😠😠
----------------------------------------
அபூர்வ சக்திகள்!!
----------------------------------------
🐘 3 ஆயிரம் அடிகளுக்கு அப்பால் ஒரு மனிதன் இருந்தாலும், மோப்ப சக்தி மூலம் யானையால் அறிந்து கொள்ள முடியும். 

🐝 அரை மைல் தூரத்தில் உள்ள ஆப்பிள் செடியின் பூ வாசனையை தேனீயால் நுகர முடியும்.

🐪 ஒரு மைலுக்கு அப்பால் இருக்கும் தண்ணீரைக்கூட மோப்ப சக்தியால் ஒட்டகம் கண்டுபிடித்து விடும்.

🐘 நீர்யானைக்குட்டி பிறந்தவுடன் நீந்தத் தொடங்கி விடும்.

🦃 பிரிஸ்டாக்கி எனும் வான்கோழி இன பறவைக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்ததும் பறக்க ஆரம்பித்துவிடும். 

🐦 பறவைகளில் புத்திசாலித்தனம் மிக்கது காகம்.
----------------------------------------
எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன..?
----------------------------------------
🐜 எறும்புகள் ஒருவிதமான வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன. சமூகமாக கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசனைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். 

🐜 ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன. சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பதில்லை. வாசனையை கொண்டு இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உதவுகின்றன.

🐜 சாதாரண எறும்புகள் உணவு இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்தவுடன் கூட்டுக்குத் திரும்புகின்றன. திரும்பும்போது இவை சும்மா திரும்பாது. வழி முழுவதும் வேதிப்பொருளைக் கசியவிட்டுக்கொண்டுதான் வரும். இந்த வேதிப்பொருளின் பெயர் பெரோமோன், எறும்புகளின் வயிற்றில் பெரோமோன் சுரக்கிறது. 

🐜 இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டுகிறது. எறும்புகள் வாசனையையும், சுவையையும் தங்களின் ஒரே உறுப்பால்தான் அறிந்துகொள்கின்றன.

🐜 வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் ஆகியவையும் தங்கள் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.

🐜 சில இனத்தைச் சேர்ந்த எறும்புகள் அடையாளங்களை நினைவு வைத்துக்கொண்டுதான் வழி கண்டுபிடிக்கின்றன. அவ்வகையான எறும்புகள் சுற்றுப் பகுதியில் ஓடியலைந்து தேடித்தான் உணவைக் கண்டுபிடிக்கும்.
----------------------------------------
தேனீக்களின் ஆற்றல்..!
----------------------------------------
🐝 நாம் கைகளை உரசிக் கொண்டால் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை உணரலாம். அது போல தேனீக்கள் சிறகடிக்கும்போதும் குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது.

🐝 ஒரு தேனீயின் சிறகடிப்பில் எவ்வளவு வெப்பம் வெளிப்பட்டுவிடப்போகிறது என்று நாம் சுலபமாக நினைக்கலாம்.

🐝 ஆனால் தேனீக்கள் சிறகடித்தால் 7 வாட்ஸ் பல்பு எரிய வைக்கத் தேவையான வெப்ப ஆற்றல் கிடைப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக