வாழ்வதற்காக வேலை என்ற காலம் மாறி வாழ்வு முழுவதும் வேலை என்ற நிலை சமீபத்திய ஆண்டுகளாக காணப்படுகிறது. முன்பெல்லாம் ஒரு சில வேலைகள் மட்டுமே மாலை 5 மணிக்கு மேல் இருக்கும். பின் ஒரு கட்டத்தில் வேலை நேரம் 5.30 மணி என்றானது, பின் 6 ஆனது.
ஆனால் இன்றோ 24*7 வேலை நேரம் பல இடங்களில் மற்றும் நிறுவனங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மெஷின் வாழ்விற்கு நடுவில் நாம் அனைவரும் நம் வாழ்க்கை முறையை தக்க வைத்துக் கொள்ள போராடும் போது, குறிப்பாக 30 வயதிற்குள் நுழைவோர் தனது வாழ்க்கையை செட்டில் செய்ய அல்லது இது தான் என்று தீர்மானிக்கும் நேரத்தில் செய்யும் சில முக்கிய தவறுகள் உள்ளன.
ஒருவர் தனது 30 வயதில் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் (career mistakes) இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. நீங்கள் 30 வயதிற்கு அருகில் அல்லது 30 வயதை கடந்தவர் என்றால் கீழ்காணும் தவறுகளை சரி செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
எதிர்காலத்திற்கான நிதி ஆதாரம் உங்களிடம் இல்லாமல் இருப்பது :
அவ்வப்போது நல்ல ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்ற ஹை-எண்ட் ஷாப்பிங் சிறந்தது தான். ஆனால் 30 வயதிற்குள் ஒருவர் நல்ல நிதி சேமிப்பை வைத்திருப்பது முக்கியம். சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அத்தியாவசிய செலவு போக கூடுதல் பணத்தை சேமிப்பில் வைக்க வேண்டும். அதே போல சிறிய அளவிலான முதலீட்டை திட்டமிட வேண்டும்.
அதிகமாக வேலை செய்வது மற்றும் உறவுகளை புறக்கணிப்பது :
பணம் சம்பாதிப்பதற்காக நாம் அனைவருமே கடினமாக உழைக்கிறோம். ஆனால் ஒரு சிலர் எந்நேரமும் வேலை வேலை என்றே இருப்பார்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆன பிறகு முக்கிய உறவுகள் மற்றும் எல்லா தொடர்புகளையும் இழப்பார்கள்.
எனவே பணம் சம்பாதிக்க முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் உறவுகளை புறக்கணிக்காதீர்கள். நீங்கள் வயதாகும் போது, அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவது கடினம். எனவே நீங்கள் இளமையாக இருக்கும் போது அவற்றை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு குடும்பத்தை முழுவதும் தாங்க கூடியவராக இல்லாமல் இருப்பது :
யாரும் பெற்றோருக்குரிய திறன்களுடன் பிறக்கவில்லை, அது ஒரு கற்றல் அனுபவம். குடும்பக் கட்டமைப்பைப் பொருட்படுத்தாமல், நீங்கள் குழந்தைகளைப் பெற விரும்புகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க 30 வயதுகள் தான் சரியான நேரம். குழந்தைகளைப் பெற தயாராக இல்லை என்ற பயம் ஆதாரமற்றது என்பதை பல பெற்றோர்கள் 40 வயதில் உணர்கிறார்கள்.
கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு இல்லாமல் இருப்பது :
நீங்கள் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் 30 வயதில் இருப்பவர் என்றால் நீங்கள் சம்பாதிக்கும் பணம் பயனற்றது. எந்த வயதானாலும் வேலை மற்றும் மகிழ்ச்சியை சமநிலைப்படுத்த வேண்டிய நேரம் இது. வார இறுதி நாட்களில் பயணம் செய்யுங்கள், உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக