உலகின் மிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையை பெப்பல்ஸ் எனப் பெயர் கொண்ட டாய் பாக்ஸ் டெரியர்(Fox Terrier) ரக நாய் பெற்றுள்ளது. பொதுவாக நாய்களுக்கான வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகளாகவே கருதப்படும். இந்நிலையில், இந்த கின்னஸ் சாதனை படைத்த நாய்க்கு 22 வயது 59 நாள்களாகும். 2000ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இந்த நாய்க்குட்டி பிறந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த பாபி மற்றும் ஜூலை கிரோகோரி தம்பதி இந்த நாயின் உரிமையாளர்கள் ஆவர். தங்கள் செல்லப் பிராணிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் குறித்து உரிமையாளர் ஜூலி கூறுகையில், இது எங்களுக்கும் மாபெரும் பெருமையாகும். பெப்பெல்ஸ் இத்தனை ஆண்டுகளாக வாழ்க்கையை எங்களின் அழகானதாக வைத்துள்ளது.
எங்களின் நம்பிக்கை ஒளியே செல்லப் பிராணிதான். 20 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதலாக இவளை பார்த்தபோதே மிகவும் பிடித்துவிட்டது. 20 ஆண்டுகளில் பல மகிழ்ச்சியையும், சில துக்கங்களையும் எங்கள் நாய் கண்டுள்ளது. இதன் இணை ராக்கி 2017ஆம் ஆண்டு உயிரிழந்த போது மாபெரும் துக்கத்தில் சிக்கித் தவித்தது. பின்னர் சில மாதங்கள் தேறிவிட்டது. இதன் வயதை யார் கேட்டாலும் ஆச்சரியமாக பார்ப்பார்கள் என்றார்.
அன்பு, முறையான கவனிப்பு, ஆரோக்கியமான உணவு இவையே நாய் வளர்ப்புக்கு முக்கியமான தேவைகள். அதேபோல் செல்லப் பிராணியையும் வீட்டின் ஒரு நபர் போலவே கருதி உரிய சூழலில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ஜூலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக